மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய பட்ஜெட். இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கொரோனா நெருக்கடி, வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்திற்கு மத்தியில் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட் மீது பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

The much-expectation Union Budget will be tabled by Finance Minister Nirmala Sitharaman today.

2021 - 2022 ஆம் நிதி ஆண்டுக்கான   பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். 

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 29-ஆம்  தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 15 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் அமர்வு மார்ச் 8 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரையிலும் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. கடந்த 29ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைத்தார். இந்நிலையில் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்கிறார். எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடும் சவால் மிகுந்த தாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து இந்திய பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் அதை சரி கட்டுவதற்கான பட்ஜெட்டாக இது அமைய  வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதே அதற்கு காரணம். 

The much-expectation Union Budget will be tabled by Finance Minister Nirmala Sitharaman today.

கொரோனா எதிரொலியாக வேலையில்லா திண்டாட்டம் நாட்டின் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது அத்தியாவசிய பொருட்களின் மீதான விலை  உயர்வால் மக்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றனர்,  இப்படி பிரச்சனை மேல் பிரச்சனை என மக்கள்  எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த பட்ஜெட் மீது பொதுமக்களின் எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த முறை தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் இதுவரை கண்டிராத அளவில் இருக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக இந்த பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கொரோனா நெருக்கடி, வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்திற்கு மத்தியில் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட் மீது பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா.? 

The much-expectation Union Budget will be tabled by Finance Minister Nirmala Sitharaman today.

அண்டைநாடுகளால் எல்லை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், ராணுவம் அதன் உட்கட்டமைப்புக்கு ஏற்கனவே அதிக நிதி ஒதுக்கப்பட்டுவரும் நிலையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கொரோனா பெருந்தொற்றால் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் பெரும் சவாலாக இந்து வரும் நிலையில், சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்புக்காக நிதி ஒதுக்கப்படுமா? வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும், கிராமப்புறங்களை மேம்படுத்தும் வகையிலும் நிதி ஒதுக்கப்படுமா? வருமான வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா? வரி விகிதங்களில் மாற்றம் ஏற்படுமா? கொரோனா வைரஸ் நெருக்கடியால் நாடு பொருளாதார சரிவை சந்தித்துவரும் நிலையில் கூடுதல் வரி (செஸ்) விதிக்கப்படுமா எனப் பல்வேறு கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios