Asianet News TamilAsianet News Tamil

அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர்..! மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும்-கே.பாலகிருஷ்ணன்

அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும். அதுதான்‌ தமிழ் நாட்டின்‌ விருப்பம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

The Marxist Communist has insisted that Governor RN Ravi should leave Tamil Nadu
Author
First Published Jan 9, 2023, 1:05 PM IST

முதல்வர் முடிவு-சரியானதே

தமிழக சட்டப்பேரவையில் ஒப்புதல் அளித்த வாக்கியங்களை படிக்காமல் தவிர்த்த ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார், இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தில் இருந்து ஆளுநர் ஆர் என் ரவி பாதியில் வெளியேறினார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி  ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும்‌ என முதலமைச்சர் பேசியுள்ளார். அரசின் கொள்கை‌ உரையே‌ அவைக் குறிப்பாக இடம்பெற வேண்டும்‌ என்பது‌ சரியான, வரவேற்க வேண்டிய முடிவு.

ஆளுநர் தாமாக பேசிய எந்த உரையும் அவை குறிப்பில் பதிவேற்ற கூடாது..! அதிரடியாக உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

The Marxist Communist has insisted that Governor RN Ravi should leave Tamil Nadu

தேசீய கீதத்தை புறக்கணித்த ஆளுநர்

தமிழ் நாடு முதலமைச்சரின்‌ இந்த நடவடிக்கை சட்டமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராத‌து. அரசியல் சாசன வரம்பினை மீறி‌ தொடர்ந்து செயல்பட்டுவரும்  ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இது பொறுத்தமான‌ பதிலடி.முதலமைச்சரின் பேச்சை  கேட்டுக் கொண்டிருந்த ஆளுநர் அவையில் இருந்து முன்கூட்டியே வெளியேறியுள்ளார்‌. தேசிய கீதத்தை புறக்கணித்து அவமதித்துள்ளார்.‌ எதிர்க் கட்சி போல ஆளுநர் நடந்திருப்பது உரிமை மீறல்,‌ மிகுந்த கண்டனத்திற்குரியது.

 

தமிழகத்தை விட்டு வெளியேறிடுக

அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும். அதுதான்‌ தமிழ் நாட்டின்‌ விருப்பம்.‌சட்டமன்றத்தில்‌ எழும்பிய முழக்கம், தமிழ் நாடெங்கும் எதிரொலிக்க வேண்டும்.‌ஆளுநரின் அடாவடிக்கு எதிரான போராட்டக் களத்தில்‌,‌ அனைத்து கட்சிகளும்‌ இணைந்து நிற்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

ஆளுநரை பக்கத்துல வைத்துக்கொண்டு முதல்வர் இப்படி பேசலாமா? இது மரபுக்கு எதிரானது.. எடப்பாடி பழனிசாமி..!
 

Follow Us:
Download App:
  • android
  • ios