அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலவதியாகிவிட்டதா? இல்லையா?- ஓபிஎஸ் பதிலளிக்க நீதிமன்றம் அவகாசம்

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலவதியாகிவிட்டதா? இல்லையா? என்பது குறித்து பதிலளிக்க முன்னாள் முதல்வர்  பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
 

The Madras High Court has given time to OPS to file an explanation in the AIADMK general committee case

அதிமுகவில் அதிகார மோதல்

அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம்  நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து நீதிமன்றத்தில் இரண்டு தரப்பும் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. இந்தநிலையில்  கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக  பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், பொதுக்குழு தொடர்பாக  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த மனுக்கள் செல்லாததாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

பதவிவெறி பழனிசாமியே வெளியேறு..! இபிஎஸ்க்கு எதிராக போஸ்டர் ஒட்டி தெறிக்கவிடும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

The Madras High Court has given time to OPS to file an explanation in the AIADMK general committee case

ஓபிஎஸ்க்கு அவகாசம்

இதற்கு மறுப்பு தெரிவித்த பன்னீர்செல்வம் தரப்பு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? என்பது குறித்து, நிலுவையில் உள்ள மனுவில் தான் முடிவெடுக்க முடியும் என இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை  உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளதாக கூறினார்.  மேலும், இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதை ஏற்ற நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்ய  ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு அனுமதி அளித்து,  விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படியுங்கள்

அமமுக பிரமுகர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் எடப்பாடி பழனிசாமி... காலியாகும் டிடிவி.தினகரனின் கூடாராம்..!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios