மத்திய பிரதேச மாநிலத்தில் விதவைப் பெண்ணை வீட்டிற்குள் புகுந்து மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அந்தப் பெண்ணின் பெண்ணுறுப்பில் 4 அடி நீளமுள்ள இரும்புக் கம்பியை சொருகி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நாளுக்குநாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க காவல்துறையினர் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 

சித்தி மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவர், அப்பகுதியில் சிறிய பெட்டிக்கடை ஒன்று நடத்தி வருகிறார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணிடம் குட்கா மற்றும் தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது அதை கெடுக்க அந்தப்பெண் உள்ளே சென்றபோது. திடீரென அந்தபெண்ணைத் தொடர்ந்து மளிகை கடைக்குள் நுழைந்த அந்த காமவெறி பிடித்த கும்பல், அந்தப் பெண்ணின் வாயை பொத்தி, அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கி பாலியல் வன்புணர்வு செய்தனர். பிறகும்  வெறி அடங்காத அந்த கும்பல், அந்தப் பெண்ணின் பெண்ணுறுப்பில் நான்கு அடி நீளமுள்ள இரும்பு கம்பியை சொருகி விட்டுச் சென்றனர். அதில் அப்பெண் மயக்கமடைந்தார். பொதுமக்கள் கொடுத்த தகவலை அடுத்து, அங்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு ரோவா மாவட்டத்திலுள்ள சஞ்சய்காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆபத்தான நிலையில் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.  மருத்துவர் குழு பெண்ணுறுப்பில் சொருகப்பட்டுள்ள இரும்பு கம்பியை நீக்கியுள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து அமிலியா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சித்தி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் நிர்பயா சம்பவத்தை நினைவூட்டுவதாக உள்ளது. கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை  வழங்கவேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்திரப்பிரதேசத்தின் படான் என்ற இடத்தில் 50 வயது பெண்ணை கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமும் பதிவாகி உள்ளது. அதாவது கோயிலுக்கு வழிபடச் சென்ற பெண்களை வழிமறித்து கடத்திய கும்பல் பல மணி நேரம் கதறக் கதற கற்பழித்து பின் இரவு 11:30 மணிக்கு சாலையில் தூக்கி வீசியுள்ளனர். அதில் அந்த பெண் சடலமாக மீட்கப்பட்டார். அவர்கள் கொடூரமாக கற்பழிக்கப்பட்டது, பின்னர் பிரேத பரிசோதனையில் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.