நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தான அனைத்து பகுதிகளிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் பணிகளை பல்வேறு அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும், வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதிமுக - பாஜக இடையே கூட்டணி முடிவுகள் எட்டப்படாத நிலையில் தனித்து போட்டியிடவுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், ஈரோடு, மாநகராட்சி வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 2022 மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி உறுப்பினர், நகராட்சிமன்ற வார்டு உறுப்பினர் மன்ற வார்டு உறுப்பினர் மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான ஆகிய பதவிகளுக்கான பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள் கழக வேட்பாளர்கள் மூன்றாவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.02.2022 அன்று நடைபெற உள்ளதையொட்டி, மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக, மாவட்டம் வாரியாக கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக, மாவட்டம் வாரியாக மாவட்டம் வாரியாக, ஒவ்வொரு வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சேலம், ஆவடி, திருச்சி, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி மாநகராட்சிகள், தேனி, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இடம்பெற்றன. இந்த நிலையில் தற்போது வெளியான மூன்றாம் கட்ட பட்டியலில், காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், கும்பகோணம், தஞ்சை, ஈரோடு, நாகர்கோவில் மாநகராட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
