Asianet News TamilAsianet News Tamil

நாய் குரைப்பதற்கெல்லாம் சிங்கம் குரைக்க கூடாது.. டப்பிங் கலைஞர்கள் குறித்து ராதாரவி ஆணவப் பேச்சு.

" நாய் குரைக்கிறது என்பதற்காக சிங்கம் குறைக்க கூடாது" சிங்கம் கர்ஜிக்க வேண்டும்.  அவர்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று நீங்கள் ஆராயுங்கள்,  ரிஜிஸ்ட்ரார் ஏதோ தீர்ப்பு கொடுத்தது போலவே அவர்கள் கூறுகின்றனர். 

The lion should not bark at the barking of the dog .. Radharavi arrogant talk about dubbing artists.
Author
Chennai, First Published Jan 31, 2022, 7:29 PM IST

நாய் குரைக்கிறது என்பதற்காக சிங்கமும் குறைக்கக் கூடாது, சிங்கம் கர்ஜிக்கும் என தன் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ள டப்பிங் கலைஞர்களை நடிகர் ராதாரவி விமர்சித்துள்ளார். அவரின் இந்த பேச்சு பலரையும் முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது. 

எம்ஆர் ராதாவின் புதல்வர், தமிழ் சினிமாவில் கைத்தேர்ந்த நடிகர் என பல பெருமைகள் ராதாரவிக்கு இருந்தாலும் அவரின் பேச்சுக்கள் பல நேரங்களில் சர்ச்சைக்குறியதாகவே இருந்து வருகிறது. யாரையும் வெளிப்படையாக விமர்சிக்கும் ராதாரவியின் வார்த்தைகள் சில நேரங்களில் விமர்சனத்திற்கு ஆளாவோரை காயப்படுத்தவும் செய்துவிடுகிறது. பல நேரங்களில் அவர்கள் வாயே அவருக்கு  வினையாகவும் முடிந்ததை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். இதுவரை தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் ஒன்றுவிடாமல் சேர்ந்து பின்னர் அங்கு சர்ச்சைக்குரிய வகையில் பேசி, அக்கட்சிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் மூலம் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு அடிக்கடி இடம்பெறும் நபராகவும் அவர் இருந்து வருகிறார். சில நடிகைகளை அவதூறாகப் பேசியது முதல் கட்சித் தலைவர்களை ஒருமையில் விமர்சிப்பது வரை ராதாரவியின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இதேபோல் அவர் நடிகர் சங்கத்தில் இருந்த போது அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விஷால் நடிகர் சங்க  தேர்தலில் களம் இறங்கிய போது சரத்குமார், ராதாரவி போன்றோர் படுதோல்வி அடைந்தனர். அதற்கு முன்பு வரை நடிகர் சங்கத்தை கையில் வைத்துக்கொண்டு அவர்கள் ஊழலில் ஈடுபட்டார்கள் என்பதே அத்தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் டப்பிங் கலைஞர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் ராதாரவி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக தென்னிந்திய சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த தாசரதி, முரளிகுமார், சி.ஜி மயிலை குமார், ஜேம்ஸ் கண்ணன், மதிசுதா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் சினிமா டப்பிங் கலைஞர் சங்கத்தின் பொறுப்பிலுள்ள ராதாரவி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். சங்கத்துக்கு 47.5 லட்சத்துக்கு வாங்கிய நிலத்தை கோடிக்கணக்கில் வாங்கியதாக போலி கணக்கு காட்டியுள்ளார்.

The lion should not bark at the barking of the dog .. Radharavi arrogant talk about dubbing artists.

டப்பிங் கலைஞர்கள் தங்களுக்குரிய சம்பளத்தையும் நேரில் வாங்க தடை விதித்திருந்தார், அவர் செய்யும் தவறை சுட்டிக் காட்டும் உறுப்பினர்களை குறிவைத்து சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளார், என டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் நடக்கும் ஊழலை விசாரிக்க மூத்த உறுப்பினர்கள் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் இதுகுறித்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது, தொழிலாளர் துறையும் விசாரணை செய்து ராதாரவி தலைமையிலான நிர்வாகத்தில் முறைகேடுகள்  நடந்துள்ளதாக முகாந்திரம் இருப்பதாக அறிக்கை கொடுத்துள்ளது. எனவே ராதாரவி மீது கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள ராதாரவி, அவர்கள் என்மீது வைத்திருக்கிற குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுக்கக் கூடாது என நினைக்கிறேன்.

" நாய் குரைக்கிறது என்பதற்காக சிங்கம் குறைக்க கூடாது" சிங்கம் கர்ஜிக்க வேண்டும்.  அவர்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று நீங்கள் ஆராயுங்கள்,  ரிஜிஸ்ட்ரார் ஏதோ தீர்ப்பு கொடுத்தது போலவே அவர்கள் கூறுகின்றனர். அவர் அப்படி கூறி விட்டார், இவர் திருடி விட்டார் என்று பேசி வருகின்றனர்.  மொத்தத்தில் இதுதொடர்பாக கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் என்றுதான் ரிஜிஸ்ட்ரார் தெரிவித்திருக்கிறார். ஒரு சங்க பிரச்சனைக்கு நீதிமன்றத்தை அனுகாமல் இதை வெளியில் வந்து பேசுவதே தவறானது. இவர்கள் கூறியுள்ள இந்த குற்றச்சாட்டுக்கு நான் மானநஷ்ட ஈடு வழக்கு தொடரலாம், அப்படிச் செய்தால் அவர்களுடைய உண்மையான முகம் தெரிந்துவிடும். என்மீது குற்றம் சாட்டி இருப்பவர்கள் யார் என்று எவருக்குமே தெரியாது. அதேபோல் இவர்கள் செய்தியாளர்களை சந்திக்கும்போது ஊழல் குற்றச்சாட்டில்  நடிகர் சங்கத்தில் இருந்து விஷால் அவர்கள் ராதாரவியை நீக்கி விட்டார்கள் என கூறியிருக்கிறார்கள்.

The lion should not bark at the barking of the dog .. Radharavi arrogant talk about dubbing artists.

நான் இவர்களுகுக் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், அதுதொடர்பான எங்கள் மீதான வழக்கு நீதிமன்றத்திற்கு சென்று அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.  என்னைப் பற்றி பேசினால் விளம்பரம் கிடைக்கும் என்பதால் என் மீது குற்றச்சாட்டை வைத்து வருகிறார்கள் இவ்வாளு அவர் கூறியுள்ளார். அதாவது தன் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள கலைஞர்களுக்கு விளக்கம் அளிக்காமல் " நாய் குறைக்கிறது அதற்கு சிங்கமும் குறைக்காது" என ராதாரவி பேசியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios