எடப்பாடி- ஓ.பி.எஸ் ஆகியோருக்கு திறமையில்லாததால் பாஜக தயவில் ஆட்சி நடத்தும் உண்மை வெளியே வந்திருக்கிறது என அமமுக செய்தி தொடர்பாளர் சி,ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.,க்களை ரவீந்திரநாத்துடன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது யார்? எனக் கேட்டு குண்டை தூக்கி போட்டார் ராஜன் செல்லப்பா. இதனால் அதிமுக கட்சிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரும் அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளருமான சிஆர் சரஸ்வதி ராஜன் செல்லப்பா பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ’’அதிமுகவை வழி நடத்த கட்சிக்குள் ஆள் இல்லை. இப்போதான் ஞானோதயம் பிறந்திருக்கிறது. பாஜகவின் நிழலில் இருந்து வரும் அதிமுகவினர் இப்போதுதான் யோசிக்க ஆரம்பித்துள்ளனர். 
பொதுக்குழுவைக் கூட்டினாலும் அதிமுகவுக்கு திறமையான ஆளுமையை தேர்வு செய்ய முடியாது.

 பாஜக தயவில் ஆட்சி ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு சொந்த திறமை எதுவும் இல்லை. அவர்களுக்கு எந்த ஆளுமையும் இல்லை. பாஜகவின் தயவில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். ஜெயலலிதா பெற்று தந்த 37 தொகுதிகளையும் பலி கொடுத்துவிட்டார்கள். பாஜக தயவில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இல்லாத ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கினார்கள். தங்களின் இஷ்டத்திற்கு சட்டத்தை மாற்றினார்கள். இப்போது உண்மை வெளியே வருகிறது. மக்களின் ஆதரவு இல்லாததால் எல்லோரும் உண்மையை சொல்ல ஆரம்பித்துள்ளனர்’’ என அவர் தெரிவித்தார்.