Asianet News TamilAsianet News Tamil

'புரியலன்ற சோமாரிகளுக்கு...' கமல் விடுத்த கடைசி விளக்கம்..!

தமிழகத்தில் இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிந்து விட்ட நிலையில் அதற்கு சற்றுமுன்னதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.  

The last interpretation by Kamal
Author
Tamil Nadu, First Published May 17, 2019, 6:39 PM IST

தமிழகத்தில் இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிந்து விட்ட நிலையில் அதற்கு சற்றுமுன்னதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.  

கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய / மாநில அரசுகள். மக்கள் எடுத்துவிட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது.  
ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ,இந்து என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ இந்துஎன நாமகரணம் செய்யப்பட்டோம். ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர்.

The last interpretation by Kamal

நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும்பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக மதமாகக் கொள்வது எத்தகைய அறியாமை... நாம் இந்தியர் என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது. நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக, அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.

புரியலன்ற சோமாரிகளுக்கு....

The last interpretation by Kamal

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம். கோடின்ன உடனே பணம் ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி!! தமிழா நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள். எனப் பதிவிட்டுள்ளார்.

 

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல்தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசியிருந்தார். கமலின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் மீண்டும் மதம் குறித்த தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios