Asianet News TamilAsianet News Tamil

Breaking: 21 நாட்களாக தண்ணிகாட்டி வந்த ஆட்கொல்லி புலி. மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் பிடிபட்டது.

எனவே தொடர் போராட்டத்திற்கு பின்னர் அது இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது, இந்நிலையில் நேற்று இரவு அந்த புலிக்கு இரண்டாவது முறையாக மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் அந்தப் புலி தற்போது பிடிபட்டுள்ளது. 

The killer tiger trapped in after 21 days..  was caught again after being injected with anesthetic.
Author
Chennai, First Published Oct 15, 2021, 3:39 PM IST

நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் இதுவரை நான்கு பேரைக் கொன்ற T23 என்ற ஆட்கொல்லி புலி 21 நாட்களுக்கு பின்னர் மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 20 T23 புலியை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் பகீரத முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அந்த புலி நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் இதுவரை நான்கு பேரை கொன்றுள்ளது. 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் புலியால் கொல்லப்பட்டுள்ளது. இதனால் அந்த புலியை பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர்.

The killer tiger trapped in after 21 days..  was caught again after being injected with anesthetic.

எனவே அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அதை பிடிக்க இரண்டு கும்கி யானைகள், மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டது. கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் T23 புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டது, ஆனால் அந்தப் புலி தேவன் எஸ்டேட் மற்றும் மேல் பில்ட் பகுதிகளில் பதுங்கி இருந்தது, பின்னர் சத்தியமங்கலம் மற்றும் கோவையிலிருந்து வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் முதுமலை கால்நடை மருத்துவர்கள் என மூன்று பேர் கொண்ட குழு அந்த புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டது, ஆனாலும் அந்த புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டும் அது பிடிபடவில்லை. எனவே அதை சுட்டு பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அதைக் கொல்ல வேண்டாம் என கருத்து தெரிவித்தது.

The killer tiger trapped in after 21 days..  was caught again after being injected with anesthetic.

எனவே தொடர் போராட்டத்திற்கு பின்னர் அது இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது, இந்நிலையில் நேற்று இரவு அந்த புலிக்கு இரண்டாவது முறையாக மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் அந்தப் புலி தற்போது பிடிபட்டுள்ளது. இந்த தகவல் அந்த பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21 நாள் போராட்டத்திற்குப் பின் புலி பிடிபட்டுள்ளது. இது குறித்து முன்னரே தெரிவித்திருந்த வன உயிரின காப்பாளர் நீரஜ் புலி பிடிக்கப்பட்ட பிறகு அதனை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை கால்நடை மருத்துவர்கள் தான் முடிவு செய்வார்கள் என கூறியிருந்தார். இந்நிலையில் புலி மயக்க ஊசி செலுத்துப்பட்டு பிடிபட்டுள்ளதால் முதலில் அது மருத்துவரின் பரிசோதனைக்கு அனுப்பப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios