படிக்க வைத்தது காமராஜர் குடிக்க வைத்ததுதான் திராவிட மாடல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் சமூகநீதி இல்லாதது போல திமுகவினர் பேசி வருகின்றனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார். 

படிக்க வைத்தது காமராஜர் குடிக்க வைத்ததுதான் திராவிட மாடல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் சமூகநீதி இல்லாதது போல திமுகவினர் பேசி வருகின்றனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி கொடுத்துள்ளார். அப்பேட்டியில் பேரறிவாளன் விடுதலை தொடங்கி திராவிட மாடல் ஆட்சி வரை முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

தன்னால்தான் சிறையில் இருந்து பேரறிவாளன் உள்ளிட்டோரை பல ஆயிரம் பேர் மனு போட்டு பார்த்ததாக அவர் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த 7 பேர் சிறையில் இருப்பதை தமிழ்ச்சமூகம் மறந்திருந்தது. மீனவர்களுக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தியதற்காக போலீசார் அன்று என்னை கைது செய்தனர்.

வேலூர் தனிச் சிறையில் அடைத்தனர், அங்கே தனிச்சிறையில்தான் பேரளிவாளன் உள்ளிட்டோரும் இருந்தனர். வெளியே போகும்போது அனுமதி கேட்டு அவர்களை சந்தித்தேன். என்னை சந்திக்க வந்தவர்களிடம் முதலில் தம்பிகளை பாருங்கள் என்றேன், அப்படி சொன்ன பிறகு தான் அதிகம் பேருக்கு அவர்கள் அங்கு இருப்பது தெரிந்தது. அதைத்தான் நான் சொன்னேன். இதில் என்ன சர்ச்சை இருக்கிறது.

காங்கிரஸ்,பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் பேரறிவாளன் விடுதலையை எதிர்க்கிறது, இரண்டு கட்சிகளுக்கும் கொள்கை வேறுபாடு கிடையாது, பேரறிவாளனிடம் விசாரணையின்போது வாக்குமூலம் பெற்ற தியாகராஜன் அவர் சொன்னதை நான் பதிவு செய்யாமல் விட்டு விட்டேன் எனக் கூறியிருக்கிறார், நீதிமன்றம் நிரபராதி என சொல்லவில்லை என்றால் உடனே பேரறிவாளனை குற்றவாளி என்பீர்களா.? அப்படி என்றால் குஜராத் கலவரத்தின் போது முதல்வராக இருந்தவர் யார்? மோடி தானே அவருக்கு தெரியாமல் பல மாதங்கள் அங்கு கலவரம் நடந்து பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்? அதில் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் சம்பந்தம் இல்லையா? அவர்களையும் தான் நீதிமன்றம் விடுவித்ததே அப்படியென்றால் மோடியும் அமித்ஷாவும் நிரபராதிகளா? காங்கிரசையும், பாஜகவையும் மானம் கெட்டுப் போய் இந்த திராவிட கும்பல் தோளில் தூக்கி சுமக்கிறது என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி சமூகநீதியை முன்னிறுத்தி தானே நடக்கிறது என்ற கேள்விக்கு, இது சமூக நீதி ஆட்சியா? திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தலையில் செருப்பை சுமந்த சமூகம் என கூறிகிறார், ஆணவமாக பேசுகிறார்கள், தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் பெண்கள் படிக்காததை போல பேசுகிறார்கள், நாங்கள் தான் பெண்களைப் படிக்க வைத்தோம் என்கிறார்கள், நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற கேரளாவில் எங்கே திராவிட மாடல் இருக்கிறது? இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சமூக நீதி இல்லையா? மாயாவதி மம்தா இவர்களெல்லாம் இதையெல்லாம் பேசாமல் தான் முதலமைச்சராக இருக்கிறார்கள். மொத்தத்தில் சமூகத்தை படிக்க வைத்தது காமராஜர் குடிக்க வைத்தது திராவிட மாடல் என கடுமையாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து சில வெளியேறுவதாக கூறுகிறார்கள் ஒரு கட்சியில் விசுவாசிகளும் உண்டு துரோகிகளும் உண்டு, அவர்களை அடையாளம் கண்டு நீக்குவதுதான் கட்சிக்கு நல்லது, துரோகிகளை அடையாளம் கண்டு தங்கள் கட்சிக்கு பிறர் அழைத்துச் செல்வதை மகிழ்ச்சியாக பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.