Asianet News TamilAsianet News Tamil

கோவிலுக்குள் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு.. கடும்கோபத்தில் மக்கள் - எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி.!!

கோவில் பிரகாரத்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

The incident of petrol bomb hurling inside Parimunai temple in Chennai is shocking Says Edappadi Palaniswami-rag
Author
First Published Nov 10, 2023, 8:36 PM IST | Last Updated Nov 10, 2023, 8:36 PM IST

சென்னை பாரிமுனை, ஶ்ரீ வீரபத்ரசாமி திருக்கோவில் உட்பிரகாரத்துக்கு உள்ளேயே, பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை பாரிமுனை, ஶ்ரீ வீரபத்ரசாமி திருக்கோவில் உட்பிரகாரத்துக்கு உள்ளேயே, பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

The incident of petrol bomb hurling inside Parimunai temple in Chennai is shocking Says Edappadi Palaniswami-rag

இந்த கொடுஞ்செயலை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன். நான் ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் இந்த விடியா திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் மீண்டும் மீண்டும் முழுத்தோல்வி அடைந்திருப்பதன் எடுத்துக்காட்டே இந்த சம்பவம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில், ஆளுநர் மாளிகை தொடங்கி ஆலயங்கள் வரை எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருவதை கண்டு மக்கள் அச்சத்துடனும் இந்த ஆட்சியாளர்கள் மீது கடுங்கோபத்துடனும் இருந்து வருகின்றனர்.

எதிலும் அக்கறையின்றி செயல்படும் இந்த விடியா அரசின் பொம்மை முதல்வர் வெறும் வாய்ச்சவடால் இன்றி  இனியேனும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios