பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க கோரி தலைமைசெயலகத்தை முற்றுகையிட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அட்டோவில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக ஆர்பாட்டம்
சென்னை: மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான குறைந்துள்ள நிலையில் தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் இன்று பேரணி நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார் அதன்படி தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் கோட்டை நோக்கி பேரணி, இப்பேரணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை தமிழக அரசு உடனடியாக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது போல் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர்,பிரதமர் மோடி தமிழகம் வந்த போது பிரதமரை மேடையில் வைத்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய அனைத்தும் தவறான புள்ளி விவரங்கள் என தெரிவித்தார். மேலும் இது போன்ற பொய்யை கேட்க தமிழக மக்கள் தயாராக இல்லையென கூறினார்.

ஆட்டோவில் சென்ற அண்ணாமலை
இதனையடுத்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியில் வந்து கொண்டிருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திடீரென்று ஒரு ஆட்டோவில் ஏறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றார். ஆட்டோவில் திடீரென்று அண்ணாமலை ஏறிச் சென்றது காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஆட்டோ எந்த திசையில் சென்றதோ அந்த திசையில் அனைத்து பகுதியிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காமராஜர் சாலை வழியாக தலைமைச் செயலகம் நோக்கி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செல்வதாக தகவல் கிடைத்ததன் பேரில் சென்னை காமராஜர் சாலை நேப்பியர் பாலம் மற்றும் தலைமைச் செயலகம் செல்லக்கூடிய பிரதான சாலைகள் அனைத்தும் காவல்துறையினர் திடீரென்று மூடி அங்கு வரும் வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் தீவிரமாக கண்காணித்த சோதனை மேற்கொண்டனர்.

ஆட்டோவில் வீட்டுக்கு சென்றதால் பரபரப்பு
பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதே ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு சென்று விட்டார் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்ததையடுத்து பேரிக்காட் தடுப்புகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு மீண்டும் காமராஜர் சாலையில், தலைமைச் செயலகத்துக்கு செல்லக் கூடிய அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த பரபரப்பு காரணமாக சென்னை காமராஜர் சாலை பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு மீண்டும் சரி செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்
முதல்வர் பேசிய ஆங்கிலத்தை பார்த்து பயந்து ஓடிய பிரதமர்..!ஸ்டாலினை கலாய்த்த அண்ணாமலை..
