தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பாரதிய ஜனதா கட்சியை விமர்சனம் செய்து கோஷம் எழுப்பிய  சோபியா கனடாவில் படித்து வருகிறார் என்பது மட்டுமே இதுவரை தெரிய வந்தது....ஆனால், அவர் யார் என்றும், இதற்கு முன்னதாக அவருடைய ஈடுபாடு என்னவாக இருந்தது என்பதையும் இங்கு விரிவாக பார்க்கலாம். 

லூயிஸ் ஷோபியா :

``பாசிச பா.ஜ.க ஒழிக” என விமானத்தில் பயணம் செய்த தமிழிசையை பார்த்து சோபியா கோஷம் எழுப்பியதால் அவரை, தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை கொடுத்த புகாரின் அடிப்படையில்  கைது செய்து இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இவர் கனடாவில், university of montreal என்ற பல்கலை கழகத்தில், பி.எச்டி கணிதம் படித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இதற்கு முன்னதாக, தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், ஸ்டெர்லைட் போரட்டத்தின் போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றியும், வேதாந்தா நிறுவனம் பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து வந்துள்ளார். 

இது குறித்த பேட்டி ஒன்றை, The Polis Project என்ற இணையதளத்தில் கொடுத்து உள்ளார். அதுமட்டுமல்லாமல், திருமுருகன் காந்தி கைது குறித்து தன்னுடைய எதிர்ப்பை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். மேலும், சமீபத்தில் எழுத்தாளர் கைது செய்யப்பட்டது குறித்தும், ’ஒருத்தரும் வரல’ என்ற திவ்யா பாரதி இயக்கிய ஆவணப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சமூக ஆர்வலர் வளர்மதி கைது பற்றியும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளார். 

கோஷம் எழுப்புவதற்கு முன்பாக, நான் தற்போது பிளைட்டில் உள்ளேன்.. இங்கு தமிழிசை உள்ளார். எனக்கு இப்பாவே `பாசிச பா.ஜ.க ஒழிக' என கத்தி சொல்ல வேண்டும் போல இருக்கிறது...என்னை பிளைட்டில் இருந்து இறக்கி விடுவார்கள் என நினைக்கிறேன் என ஏற்கனவே ட்வீட் செய்து வைத்து உள்ளார்.

இதுவரை, ஒரு மாணவி ஏதோ பிளைட்டில் செல்லும் போது உணர்ச்சி வசப்பட்டு தான் கோஷம் எழுப்பினார், இதற்கு அந்த மாணவி  மீது நடவடிக்கை தேவையா..? தமிழிசையின் இந்த செயல் ஜனநாயக ஒடுக்கு முறை என பலரும் புரளி விட்டு வந்த  நிலையில், ஏற்கனவே தமிழிசை சந்தேகம் அடைந்த படியே சோபியா  திட்டமிட்டே `பாசிச பா.ஜ.க ஒழிக' என கோஷமிட்டது அம்பலமாகி உள்ளது.


 
மேலும், மாணவியின் இந்த கோஷம் தவறில்லை என கூறி, இதை அரசியலாக்கும் பல கட்சிகள், விமானத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தெரியாதா..? போன் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும் என்பது முதல் சீட் பெல்ட் அணிவது வரை...அமைதியாக, ஹேப்பி ஜர்னி செய்ய வேண்டும் என சொல்வது  வரை விமானத்தில் கடைப்பிடிக்கப்படுவது சோபியாவுக்கு தெரியாதா என்ன..? என விமர்சகர்கள் கேள்வி  எழுப்பி நெத்தியடி கொடுத்து உள்ளனர்.