கொரோனா அச்சத்தால் அரசு தேர்வையே ரத்து செய்ய, மாணவர்களை அழைத்து மீண்டும் தேர்வு எழுத வைக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியூட்டுகிறது. 

கொரோனா தொற்றால் பள்ளிக் கூடங்களை எல்லாம், மூன்று மாதங்களாக மூடி வைத்திருக்கிறார்கள். பத்தாம் வகுப்பு மாணவர்கள் எல்லாருக்கும், 'ஆல் பாஸ்' போட்டு விட்டார்கள். அவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க, காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை ஒப்படைக்க, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு போட்டுள்ளார்கள்.

 

பெரும்பாலான பள்ளிகளில்  காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை, குப்பையில் போட்டுவிட்டார்கள். திருச்சி, இனாம்குளத்துார், சீராத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களை வரவழைத்து, குறிப்பிட்ட சில பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தி, விடைத்தாள்களை வாங்கி அனுப்பி அனுப்பி இருக்கிறார்கள். இதே போல், தமிழகத்தில் பல இடங்களில் நடக்கிறது. இப்படி, மாணவர்களை கூட்டி தேர்வு எழுத வைத்தால், கொரோனா பரவாதா? என மாணவர்களின்  பெற்றோர் ஆதங்கப்படுகிறார்கள்.