Asianet News TamilAsianet News Tamil

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை  - எடப்பாடிக்கு திக் திக் கொடுத்தது உயர்நீதிமன்றம்...

The High Court has ordered the Speaker to hold the trust vote until Wednesday.
The High Court has ordered the Speaker to hold the trust vote until Wednesday.
Author
First Published Sep 14, 2017, 3:04 PM IST


புதன்கிழமை வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என சட்டப்பேரவை சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தபோது விரைவில் பொதுக்குழு கூட்டி சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என எடப்பாடி தரப்பில் அறிவிப்பு வெளியானது. 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டிடிவிக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் எடப்பாடியை நீக்க கோரி ஆளுநரிடம் மனு அளித்தனர். 

இதையடுத்து டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள  விடுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கியிருந்தனர். 

ஆனால் இதுவரை எவ்வித முடிவும் ஆளுநர் வெளியிடவில்லை. இதனால் டிடிவி எம்.எல்.ஏக்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்கில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ளனர். 

இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பு கூறியபடி பொதுக்குழுவில் சசிகலாவையும் தினகரனையும் நீக்கி தீர்மானங்களை நிறைவேற்றினர். 

இதைதொடர்ந்து குடகு பகுதியில் தனியார் விடுதியில் தங்கியுள்ள 18 பேரிடமும் தமிழக போலீசார் சுய விருப்பத்தின் பேரில் தங்கியுள்ளார்களா என கோவை போலீசார் விசாரணை நடத்தினர். 

இதையடுத்து, டிடிவி தினகரன் அணியில் இருந்து எடப்பாடி அணிக்கு மாற வேண்டும் என்றும் இல்லையேல் பொய் வழக்கு போடுவோம் என்றும் தமிழக போலீசார் தங்களை மிரட்டுவதாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களான செந்தில் பாலாஜியும், தங்கதமிழ்செல்வனும் கர்நாடக கூர்க் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். 

இந்நிலையில், எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டது என நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க வேண்டும் என திமுக மற்றும் தினகரன் தரப்பு கோரிக்கையை ஏற்று வரும் புதன்கிழமை வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios