Asianet News TamilAsianet News Tamil

டாஸ்மாக்கை மூடு.. போலீசே பொண்டாட்டியை குத்துகிறார்..ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி..

சென்னையில் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் காவலர் விஜயகுமார் என்பவர் குடிபோதையில் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். 

The government relies on the sale of alcohol.? Police stab Wife .. Anbumani who started the game ..
Author
Chennai, First Published Feb 25, 2022, 1:23 PM IST

தமிழகத்தில் மதுவால் இளம் பெண்கள்  விதவைகள் ஆகும் அவலமும், பல குழந்தைகள் ஆதரவற்றவர்களாகும் துயரமும் அரங்கேறி வருகிறது. இனியும் இந்த நிலை தொடரக் கூடாது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அரசின் கஜானா தொழுநோயாளிகளின் கைகளில் உள்ள வெண்ணைகளால் நிரப்பப்பட கூடாது என்றும் அவர் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மது குடிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 30 ஆக இருந்தது, ஆனால் இப்போது படிப்படியாக குறைந்து 4 வயது குழந்தை கூட மது குடிக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மது குடித்துவிட்டு பெண்களும் மாணவ மாணவிகளும் தகராறு செய்யும் சூழல் நிலவுகிறது.  ஒட்டுமொத்த தமிழகமும் குடி காடாக மாறும் அவலம் ஏற்பட்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்யும் அதிமுக திமுக தங்களது தேர்தல் வாக்குறுதியில் மட்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம் என கூறுகின்றன, ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இதோ ஒழிக்கிறோம் அதோ ஒழிக்கிறோம் என காலம் கடத்துவதே வாடிக்கையாகி வருகிறது. காமராஜர் முதலமைச்சராக இருந்த போது 12,000 பள்ளிக்கூடங்களைத் திறந்தார், ஆனால் கடந்த 44 ஆண்டுகளில் திமுக அதிமுக அரசுகள் 7000 மதுக்கடைகளை  திறந்துள்ளனர்.

இதுதான் தமிழ்நாட்டின் சாபம், திராவிட கட்சிகளின் சாதனை என்று பல அரசியல் கட்சிகளும் அதிமுக திமுகவை விமர்சித்து வருகின்றன. தமிழகத்திலுள்ள பெண்களின் எதிர்பார்ப்பு மதுவிலக்கு வேண்டும் என்பதுதான், மதுவால் பல பெண்கள் கணவன்களை இழந்து, வீட்டில் பணத்தை இழந்து, நகைகள் இழந்து, புடவை இழந்து உடைமை இழந்து என இழந்து இழந்து  புலம்பும் அவலநிலை தொடர்கிறது. உலகிலேயே சாராய விற்பனையை நம்பி அரசாங்கம் நடத்தும் ஒரே மாநிலம் தமிழகம் தான் தமிழகத்தின் மொத்த வருமானம் ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடியில் 36 ஆயிரம் கோடி மது விற்பனை மூலம் கிடைக்கிறது.

இது மிகப்பெரிய அவலம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் மது ஒழிப்போம் டாஸ்மார்க் கடைகளை மூடுவோம் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகிவிட்டது, இதுவரை அதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை, இந்நிலையில்தான் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் ஒரே கட்டமாகவோ அல்லது படிப்படியாகவோ மது விலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விவரம் பின்வருமாறு:- சென்னையில் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் காவலர் விஜயகுமார் என்பவர் குடிபோதையில் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். காயம்பட்ட இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர் குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு இதை விட கொடுமையான எடுத்துக்காட்டு எதுவும் இல்லை. இது முதல் உதாரணமும் இல்லை, கடைசி உதாரணமும் இல்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஊரிலும் அரசே விற்கும் மதுவால் ஏராளமான குடும்பங்கள் சீரழிகின்றன.

ஏராளமான இளம்பெண்கள் கைம்பெண்களாக்கப்படுகின்றனர், குழந்தைகள் ஆதரவற்றவர்களாகின்றனர். இத்தகைய நிலை இனியும் தொடர்வதை அரசு அனுமதிக்கக்கூடாது. அரசின் கஜானாக்கள் ’தொழுநோயாளிகளின் கைகளில் உள்ள வெண்ணெய்’களால் நிரப்பப்பட க்கூடாது. அதனால், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியுறுத்தியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios