The government did not believe the government-run hospital
அரசு நடத்தும் மருத்துவமனை மீது அரசே நம்பிக்கை வைக்கவில்லை என்றும் அரசு மருத்துவமனையில் ஜெயலலிதாவை அனுமதிக்காதது ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய சீமான், கல்வி என்பது மானிட உரிமை என்றும் அதைத் தரவேண்டியது அரசின் கடமை என்றும் கூறினார்.
ஆனால், தற்போது எல்லாம் வியாபாரமாக மாறிவிட்டது. எல்லா துறைகளிலும் தனியார் மயம்தான். பிறகு அரசு எதற்கு இருக்கிறது? ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தனியார் மருத்துவமனைக்குத்தான் சென்றார்கள். ஏன் அரசு மருத்துவமனைக்கு செல்லவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
அரசு நடத்தும் மருத்துவமனைமீது அரசுக்கே நம்பிக்கை இல்லை என்றும் அரசு மருத்துவமனைக்குப் போயிருந்தால், 7 நாட்களிலேயே உயிர் பிரிந்திருக்கும் என்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால்தான் 75 நாட்கள் கழித்து உயிர் பிரிந்துள்ளதாகவும் சீமான் கூறினார்.
