ஒரு சில அரசியல்வாதிகள் -  சில நடிகைகளுடன் தொடர்பில் இருப்பது நெடுங்காலமாக வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் அந்த தொடர்பை வெளிப்படையாக கூறமாட்டார்கள். ஆனால், ஊரறிய நடிகையுடன் குடும்பம் நடத்தி விட்டு தற்போது அந்த நடிகையை யார் என்று தெரியாது என சமாளித்து இருக்கிறார் அந்த முன்னாள் முதல்வர்.

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவருமானவர் குமாரசாமி. இவர், நீலகெரே என்ற கிராமத்தில், குடிநீர் திட்டப் பணிகள் தொடக்க விழாவில் கலந்துக்கொண்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைதான யுவராஜ், நடிகை குட்டி ராதிகாவுக்கு ரூபாய் ஒன்றரை கோடி வழங்கிய விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த குமாரசாமி, நடிகை குட்டி ராதிகா யார்?. அவர் யார் என்று எனக்கு தெரியாது என கூறினார்.நடிகை குட்டி ராதிகாவை, குமாரசாமி 2-வது திருமணம் செய்திருந்தார்.பின்னர் அவரை விட்டு குமாரசாமி பிரிந்து விட்டார். இந்த நிலையில் அவர் தனக்கு குட்டி ராதிகாவை தெரியாது என கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை குட்டி ராதிகா , இயற்கை, வர்ணஜாலம் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்தவர்.