ஈரோடு இடைத்தேர்தல் பரபரப்பு புகார்..! திமுகவின் 10 பணிமனைகளுக்கு சீல் வைத்த தேர்தல் ஆணையம்

ஈரோடு இடைதேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக திமுகவின் 10 தேர்தல் பணிமனைகளுக்கும், அதிமுகவின் 4 தேர்தல் பணி மனைகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

The Election Officer sealed the election offices of DMK and AIADMK for violating the rules

ஈரோடு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக் சார்பாக தென்னரசு போட்டியிடுகிறார். இந்தநிலையில் இந்த தேர்தல் திமுக ஆட்சி அமைந்து 21 மாதங்களுக்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் திமுக அமைச்சர்கள் 30 பேரும், திமுகவின் அணைத்து அணிகளின் நிர்வாகிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த தேர்தல் திமுகவின் 21 மாத கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் சான்றிதழ்  என தீவிரவமாக களத்தில் இறங்கியுள்ளனர்.

ராணுவ வீரர் கொலை.! தனக்கு ஏற்பட்ட கெட்டப் பெயரை மறைக்கவே அண்ணாமலை போராட்ட அறிவிப்பு- சீண்டும் காயத்ரி ரகுராம்

The Election Officer sealed the election offices of DMK and AIADMK for violating the rules

அதிமுக-திமுக தீவிர பிரச்சாரம்

அதிமுகவை பொறுத்தவரை ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஏற்பட்ட பிளவால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் போட்டியிடாத காரணத்தில் அதிமுக ஓட்டுகள் ஒன்றினைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அதிமுக களம் இறக்கியுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் வாக்குகளை கவர 5 நாட்கள் தீவிர பிரச்சாரத்தில் எடப்பாடி ஈடுபட்டுள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாட்கள் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.

வேட்டி கட்டிய, மீசை வைத்த தலைவராக இருந்தால் தேர்தலை நேர்மையாக சந்தியுங்கள்- ஸ்டாலினுக்கு சவால் விடும் இபிஎஸ்

The Election Officer sealed the election offices of DMK and AIADMK for violating the rules

தேர்தல் பணிமனைகளுக்கு சீல்

இந்தநிலையில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கல்லுக்கடை ராஜாஜி வீதியில் செயல்பட்டு வந்த திமுக தேர்தல் பணிமனை உள்ளிட்ட 10 பணி மனைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அதேபோல அதிமுகவின் 4 பணிமனைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற நாம்தமிழர், தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் பணி மனைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

சூடு பிடிக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.!முதியவர்களிடம் தபால் வாக்கு பதிவை தொடங்கிய தேர்தல் ஆணையம்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios