Asianet News TamilAsianet News Tamil

திமுகவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் நாடகம் முடிந்தது... டாராக கிழித்த அண்ணாமலை.!

உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியினருக்கு காட்டிய எஜமான விசுவாசத்தை தமிழக காவல் துறை மிஞ்சிவிட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

The Election Commission's play to make DMK win is over ... Annamalai torn as a torrent!
Author
Chennai, First Published Oct 14, 2021, 8:08 AM IST

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தேர்தல் நாடகத்தின் இறுதி காட்சி உறுதி செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு வழங்கப்பட்டு விட்டது. அதை நிறைவேற்ற, மாற்று கட்சிகளின் வெற்றி வேட்பாளர்களைக் கண்டறிந்து, அவர்களுடைய வேட்பு மனுக்களை காரணமே இல்லாமல் தள்ளுபடி செய்த அவலம் மிக கேவலம். தேர்தல் ஆணையம் திமுகவின் வெற்றிக்கான முன்னுரையை வேட்புமனு தாக்கல் தொடக்கத்திலேயே எழுத தொடங்கிவிட்டது.

The Election Commission's play to make DMK win is over ... Annamalai torn as a torrent!
திமுக ஆட்சி அமைந்த பின்னர், மிக விசுவாசியாக நடந்து கொள்வதில், தமிழக காவல் துறை போட்டியின்றி முதலிடத்தில் இருந்தது. தற்போது நடந்த முடிந்த உள்ளாட்சி தேர்தலை பார்க்கும்போது, தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சியினருக்கு காட்டிய எஜமான விசுவாசம் காவல் துறையையே மிஞ்சிவிட்டது. தேர்தல் ஆணையமும், காவல் துறையும் கைகோர்த்து கொண்டு, திமுகவின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட அவலத்தை, தமிழக மக்கள் முகம் சுளித்து பார்த்து கொண்டிருந்தனர். தோழமை கட்சியான அதிமுக நிர்வாகிகளும், பாஜக நிர்வாகிகளும் பரவலாக அனைத்து தொகுதிகளிலும் காரணங்கள் ஏதுமின்றி கைது செய்யப்பட்டனர். ஓட்டு எண்ணும் மையங்களில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படவில்லை.The Election Commission's play to make DMK win is over ... Annamalai torn as a torrent!
சில இடங்களில் வெற்றிபெற்ற வேட்பாளர்களையும் தோல்வியுற்றவர்களாக அறிவித்த கொடுமையும் நடந்தது. கடிமான சூழலில் கடமை தவறாமல் பணியாற்றிய பாஜகவின் தோழமை கட்சியின் தொண்டர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.” என்று அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios