Asianet News TamilAsianet News Tamil

நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும்... மம்தா பக்கம் நின்ற ஸ்டாலின்..!

அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

The Election Commission must ensure that neutrality is observed...mk stalin
Author
Tamil Nadu, First Published Apr 13, 2021, 12:37 PM IST

அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இன்னமும் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

The Election Commission must ensure that neutrality is observed...mk stalin

இந்நிலையில், முஸ்லிம் வாக்குகளைப் பெற மத ரீதியாகப் பேசியதாகவும், மத்தியப் படைகளுக்கு எதிராக வெகுண்டெழுமாறு வாக்காளர்களை தூண்டியதாகவும்  மம்தா பானர்ஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, அடுத்த 24 மணி நேரத்துக்கு பிரச்சாரத்தில் ஈடுபட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.  இந்த ஆணையத்தின் இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மம்தா பானர்ஜிக்கே பிரசாரம் செய்ய ஒருநாள் தடை விதித்தது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

The Election Commission must ensure that neutrality is observed...mk stalin

இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளது.

ஆகவே, அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதிசெய்வதோடு, சார்பின்மை மற்றும் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios