The Election Commission has postponed the twin leaf symbolic trial on October 13 to Oct. 16.
அக்டோபர் 13 ஆம் தேதி நடக்கவிருந்த இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை அக்.16 ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.
அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து பன்னீர்செல்வமும் சசிகலா தரப்பும் தங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியது.
இதனால் குழப்பமடைந்த தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இதையடுத்து இரு தரப்பும் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வந்தது.
இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பும் ஒபிஎஸ் தரப்பும் ஒன்றாக இணைந்தாலும் டிடிவி தரப்பு தனியாக செயல்பட்டு வருகிறது. மேலும் கட்சி எங்களுக்கே சொந்தம் என கூறி வருகிறது.
எனவே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரி டிடிவி தரப்பு உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தது. ஆனால் டிடிவி மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது
இதையடுத்து தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்கி இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து வரும் 13 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
இதைதொடர்ந்து இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணையை ஒத்திவைக்கக்கோரி டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக வரும் 13-ம் தேதி நடக்கவிருக்கும் இறுதி விசாரணையை 21-ம் தேதி மாற்ற வேண்டும் டிடிவி தினகரன் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், அக்டோபர் 13 ஆம் தேதி நடக்கவிருந்த இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை அக்.16 ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.
