சமீபத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக் குழுவில் துணை பொதுச் செயலாளராக ஆ.ராஜா, பொதுப் பிரிவினர் பட்டியலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

 

ஆனால் கட்சி போஸ்டர், அழைப்பிதழ்களில் 'புரோட்டாகால்' வரிசைப்படி ஐந்து துணை பொதுச் செயலாளர் பட்டியலில் ஐ.பெரியசாமிக்கு அடுத்து பொன்முடி, அவருக்கு அடுத்து, சுப்புலட்சுமி ஜெகதீசன், அடுத்து ஆ.ராஜா, கடைசியாக அந்தியூர் செல்வராஜ் பெயரை உபயோகப்படுத்துகிறார்கள். 

பொன்முடிக்கு அடுத்து, ஆ.ராஜா பெயரை போடாமல் கடைசி வரிசையில் பெயர் இருந்தால் எப்படி பொதுப் பட்டியல் கணக்கில் வரும் என ஆ.ராஜா ஆதரவாளர்கள் கேள்வி கேட்கிறார்கள். அதுவும் இல்லாமல் புதிய நியமனங்களில், யாருக்கு என்ன அதிகாரம் எனத் தெரியவில்லை என்கிற முட்டலும் ஆரம்பித்து விட்டது. ஒருவருக்கொருவர் வெளியில் சிரித்தபடி போட்டோவுக்கு, 'போஸ்' கொடுத்தாலும் உள்ளுக்குள் புகைச்சல் அதிகரித்து வருவதாக கூறுகிறார்கள். மத்தளத்துக்கு இருபக்கம் இடி என்றால் திமுகவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் இடி விழுகிறது எந்த வித டிசைனோ..? என உடன்பிறப்புகள் உள்ளுக்குள் புலம்புகிறார்கள்.