Asianet News TamilAsianet News Tamil

அதிரடியாக நீக்கிய தேர்தல் ஆணையம்; அதிச்சியில் பாஜக!

பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், பர்வேஷ் சாகிப் சிங் வர்மா எம்.பி. ஆகியோரின் பெயர்களை நீக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The draconian Electoral Commission; BJP in shock!
Author
Delhi, First Published Jan 29, 2020, 5:58 PM IST

அதிரடியாக நீக்கிய தேர்தல் ஆணையம்; அதிச்சியில் பாஜக!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்து  பேசிய பாஜகவின் இரு தலைவர்களும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததால்  தேர்தல் ஆணையம் அவர்களின் பெயர்களை நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கும்படி   உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லியில் வரும் 8-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்துள்ள பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. இதற்காக மத்திய மந்திரிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என பல்வேறு நட்சத்திர பேச்சாளர்களை களமிறக்கி இருக்கிறது.The draconian Electoral Commission; BJP in shock!

இந்நிலையில் பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், பர்வேஷ் சாகிப் சிங் வர்மா எம்.பி. ஆகியோரின் பெயர்களை நீக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்து இரு தலைவர்களும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நிலையில், தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.The draconian Electoral Commission; BJP in shock!

"பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதன்மூலம், அனுராக் தாக்கூர் மற்றும் பர்வேஷ் வர்மா ஆகியோர் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய முடியாது என்று அர்த்தமல்ல. இவர்களின் பிரச்சார செலவுகள், இனி வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். செலவுக் கணக்கு வரம்பில் இருந்து விலக்கு கோர முடியாது"என்கிறார்கள்.

T.Balamurukan


 

Follow Us:
Download App:
  • android
  • ios