அதிமுக அலுவலகத்தை உடைத்து ஓபிஎஸ் அணியால் கொண்டு செல்லப்பட்ட ஆவணங்கள்..! எடப்பாடியிடம் இன்று ஒப்படைப்பு

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரால் அதிமுக அலுவலகத்தில் இருந்து  எடுத்துச்செல்லப்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவுகீணங்க எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.

The documents taken from AIADMK office by OPS team were handed over to EPS today

அதிமுக அதிகார மோதல்

அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி காலை இபிஎஸ் தரப்பில் பொதுக்குழு நடைப்பெற்ற நேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலக பூட்டை உடைத்து முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை ஓபிஎஸ் வந்த வாகனத்தில் எடுத்து சென்றனர். அன்றைய தினம் ஓபிஸ், இபிஎஸ் தரப்பினர் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

The documents taken from AIADMK office by OPS team were handed over to EPS today

ஆவணங்கள் திருட்டு புகார்

இதனை தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதலில் ஓ.பி.எஸ் தரப்பினர் கட்சியின் ஆவணங்களை எடுத்துச் சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தது. இந்த கலவரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களை எல்லாம் ஓ.பி.எஸ் தரப்பினர் சென்னை சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.  இந்த நிலையில் இந்த பொருட்களைக் கேட்டு சி.வி சண்முகம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் கலவரம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், சி.வி. சண்முகத்தின் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

The documents taken from AIADMK office by OPS team were handed over to EPS today

ஆவணங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

இதனை எதிர்த்து சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும் பொருட்களையும் மனுதாரர் சி.வி சண்முகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் அதிமுக அலுவலகத்திலிருந்து ஓ.பி.எஸ் தரப்பினர் எடுத்துச் சென்ற ஆவணங்கள் இன்று மதியம் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இதனை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் பெற்றுக்கொள்கிறார்.

இதையும் படியுங்கள்

தி கேரளா ஸ்டோரி படத்தை பார்த்து ரிவீயூ சொன்ன ஆளுநர் ஆர்.என்.ரவி.! என்ன சொன்னார் தெரியுமா.?

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios