ரஜினிகாந்த் என் நீண்ட கால நண்பர். அவர் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்ற  முடிவை வரவேற்கிறேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம்;- சட்டப்பேரவைத் பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக அறிவித்த நாளன்றே திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. அரசியல் கட்சி தலைவர்கள், மக்களை சந்திப்பது இயல்பு. அதேபோன்று தான் திமுக தலைவர் ஸ்டாலின், மக்களை சந்தித்து நடத்தும் கிராம சபை கூட்டத்தில், அதிமுகவினர் சர்ச்சையை உருவாக்குகின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சுமார் 100 நாட்களே உள்ளன. தினமும் கடினமாக உழைத்தால் 200 தொகுதிகளை திமுக கூட்டணி எளிதாக கைப்பற்றிவிடலாம்.விவசாயிகள் போராட்டம், 39வது நாளாக தொடர்கிறது.  இதுவரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால், மத்திய அரசு, தன் பிடிவாதத்தை மாற்றிக் கொள்வதாக இல்லை. முரட்டுத்தனமான இயந்திரமாக, பாஜக அரசு செயல்படுகிறது. இந்திய பொருளாதாரம், தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ரஜினிகாந்த் என் நீண்ட கால நண்பர். அவரது முடிவை வரவேற்கிறேன் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.