மதுக்கடைகளை மூடுவோம் என திமுக கூறுகிறது. ஆனால் அந்தக்கட்சியால் மதுக்கடைகளை மூட முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

லாக்டவுனுக்கு பிறகு 44 நாட்கள் கழித்து தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் நேற்று திறக்க அனுமதிக்கப்பட்டன. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி, மகனுடன் வீட்டுக்கு வெளியே வந்து கருப்பு உடை அணிந்து மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனிடையே திமுகவை சேர்ந்தவர்கள் நடத்தும் மது ஆலைகளை மூடிவிட்டு திமுக போராட்டம் நடத்த வேண்டும் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

 

இந்நிலையில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தொல்.திருமாவளவன், திமுகவின் மதுக்கொள்கைக்கு எதிராக முன்பு ஒரு சமயத்தில் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘’மதுக்கடைகளை மூடுவோம் என திமுக கூறுகிறது. ஆனால் அந்தக்கட்சியால் மதுக்கடைகளை மூட முடியாது. ஏனென்றால் மது விற்பனையை கொண்டு வந்ததே திமுகதான். ஆகையால் திமுக ஆட்சிக்கு வந்தாலும் மதுவிலக்கை அமல்படுத்தாது’’என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.