2ஜி வழக்கில் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. ஆகையால், ஆ.ராசா ஜனவரி 31ம் தேதி வரைதான் பேச முடியும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வேளாண் சட்டங்கள் குறித்து திமுக பொய் செய்திகளை பரப்பி வருகிறது. மக்கள் மத்தியில் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தேர்தலை மனதில் வைத்து திமுக இதை செய்து வருகிறது. இதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். 

வேளாண் சட்டங்களின் நன்மைகள் தெரியாமல் பேசுபவர்கள் முட்டாள்கள், அயோக்கியர்கள். 2ஜி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதை நினைவில் வைத்து ஏ.ராஜா பேச வேண்டும். அவர் ஜனவரி 31 வரை தான் இவ்வாறு பேச முடியும். திமுக கொள்ளையர்களின் கூட்டம். திமுகவுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

மேலும், திமுகவில் ரஜினி ரசிகர்கள் அதிகம் உள்ளனர். ரஜினி கட்சி தொடங்குவதால் திமுகவுக்குதான் ஆபத்து. அமித் ஷா வருகையால் ரஜினி கட்சி தொடங்கவில்லை.சுயமாக சிந்தித்து கட்சி தொடங்குவதாக  எச்.ராஜா தெரிவித்துள்ளார்.