திமுக ஒருபோதும் மத்திய அரசிடம் அடிமையாக இருந்தது இல்லை என டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் திமுக மத்திய அரசுக்கு கொத்தடிமையாய் இருந்ததாகவும், தமிழ்நாட்டை அடைமானம் வைத்து அனைத்து திட்டங்களையும் அனுமதித்தது எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும் சில சலுகைகளை தமிழகத்திற்கு பெற மத்திய அரசுடன் அதிமுக அரசு இணக்கமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளரகளை சந்தித்த டிகேஎஸ் இளங்கோவன், திமுக ஒருபோதும் மத்திய அரசிடம் அடிமையாக இருந்தது இல்லை என தெரிவித்தார்.

மத்திய அரசிடம் திமுக எந்த காலத்திலும் அஞ்சியதும் இல்லை, அடி பணிந்ததும் இல்லை எனவும், அதிமுக அரசு ஒவ்வொரு நாளும் மத்திய அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டுதான் நடக்கிறது எனவும் தெரிவித்தார்.