ஸ்டாலின் உட்பட 21  எம்.எல்.ஏக்களுக்கு எதிராக உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கூறி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது.  
 

தமிழகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், இதில் அமைச்சர் மற்றும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்பு உள்ளதாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.
 

இது தொடர்பாக சட்டப்பேரவையில் சபாநாயகர் அனுமதி இல்லாமல் திமுகவினர் பான் மசாலா, குட்கா போதை வஸ்துக்களை எடுத்து வந்து தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டினர். 
 

இதனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவரப்பட்டது.
 

இதைதொடர்ந்து  துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் உரிமைக்குழு கூடியது. அப்போது, குட்கா போன்ற போதை பொருட்கள் கொண்டுவந்தது குறித்து 21 திமுக எம்.எல்.ஏக்கள் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 
 

இதையடுத்து சபாநாயகர் தனபாலை திமுகவை சேர்ந்த 8 எம்.எல்.ஏக்கள் சந்தித்து நோட்டீசுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரினர். 
 

இந்நிலையில், ஸ்டாலின் உட்பட 21  எம்.எல்.ஏக்களுக்கு எதிராக உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கூறி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது