பாஜக தமிழக தலைவர் தமிழிசை எதை சொன்னாலும் அதை கலாய்த்து மீம்ஸ்கள் பறக்கின்றன. அவர் தலைக்கு எண்ணெய் வைக்காததை கூட கிண்டலடிக்கும் அளவுக்கு மீம்ஸ்கள் தெறிக்கின்றன. இந்நிலையில், மீம்ஸ்களின் லேடி சூப்பர் ஸ்டார் தமிழிசை என விமர்சித்துள்ள திமுக நாளேடான முரசொலி செய்தி வெளியிட்டுள்ளது.

 

இன்று வெளியான முரசொலி இதழில் வெளியாகி உள்ள சிலந்தி பதில்கள் பக்கத்தில், ’ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு அவர்களது ரசிகர்கள் எப்படி காத்திருப்பார்களோ அதேபோல தமிழிசை பேட்டி எப்போது வரும் என வடிவேலு படக் காமெடிகளுடன் மீம்ஸ் தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். தமிழிசையை மீம்ஸ் தயாரிப்பாளர்கள் எப்படியெல்லாம் கிண்டல் செய்கிறார்கள்’’ என கூறப்பட்டுள்ளது. 

அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டுள்ள சூழலில், அது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசையைத் தொடர்பு படுத்தி இணையதளத்தில் மீம்சுகள் வைரலாகி வருகின்றன. இந்நிலையில்,  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை விமர்சித்து முரசொலி செய்தி வெளியிட்டுள்ளது. 

ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டேன் என தமிழிசை ஏற்கெனவே தெரிவித்து இருந்தார் ‘’தமீம்ஸ் மீம்ஸ் போடும் அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன். ஊர்பணத்தை சுருட்டியவர்களைகூட மீம்ஸ் போடுபவர்கள் விட்டு விடுகின்றனர், ஆனால், என்னை விடவில்லை. சுருட்டை முடியை நன்றாக சீவி வருகிறேன், ஆனாலும், வடிவேலுவுடன் இணைத்து மீம்ஸ் போடுகிறார்கள். இதில் என்ன ஒற்றுமை என்றால் எனது வீடும், வடிவேலுவின் வீடும் அருகருகே உள்ளன’’ என ஏற்கெனவே கூறியிருந்தார்.