The Deputy Chief Minister of O.Panniriselvam is to be appointed and the consultation meeting has been discussed.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்க இருப்பதாகவும், இதுபற்றி ஆலோசனை கூட்டத்தில் பேச உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன் மூலம், அதிமுக இரு அணிகளும் இணைய வாய்ப்புள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. 

ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகளாக பிறிந்தது. பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு, இரு அணிகளும் இணைவதற்கான பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது, சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து விலக்க வேண்டும் என ஓ.பி.எஸ். அணியினர் வலியுறுத்தினர்.

இதைதொடர்ந்து சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக அமைச்சர்கள் அறிவித்தனர். இதற்கு எதிரிப்பு தெரிவித்து சில எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு அளித்தனர். சிலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியினராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

ஆட்சி எடப்பாடி நடத்தவேண்டும். கட்சியை டிடிவி.தினகரன் வழி நடத்துவார் என பேசப்பட்டது. இதற்கிடையில் தினகரன் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிட்டார். இதனால், அதிமுகவில் மேலும் மோதல் அதிகரித்தது.

இதையொட்டி இன்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு நிர்வாகிகள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

இந்நிலையில், இன்று காலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ். அணியுடன் இணைவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. 

மேலும், இரு அணிகளும் இணைந்த பின்னர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும், அவரது அணியினர் சிலருக்கு கட்சியிலும், ஆட்சியிலும் பதவி வழங்க இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.