ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த எஸ்றா சற்குணம் மகள்.. முதல்வர் துணை முதல்வரை நேரில் சந்தித்து ஆதரவு..
ஆனால் தற்போது இவரின் கட்டுப்பாட்டிலிருந்த பேராயத்திற்கு நிரந்தர நிர்வாக பேராயர் பொறுப்பை அவரது மகள் டாக்டர் கதிரொளி மாணிக்கம் அவர்கள் ஏற்றுள்ளார்.
2021 சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் எஸ் ரா சற்குணம் அவர்களின் மகள் டாக்டர் கதிரொளி மாணிக்கம் ,5 பேராயர்கள் மற்றும் 50ஆயர்களுடன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எஸ்றா சற்குணத்தின் மகள் கதிரொளி மாணிக்கம்,கிருத்துவ பேராயர்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தங்கள் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களது இல்லத்தில் 5 பேராயர்கள் மற்றும் 50 ஆயர்களுடன் நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கதிரொளி மாணிக்கம், தாம்பரம் அருகே துர்கா நகரில் 33 ஆண்டுகளாக இருந்த தங்களது திருச்சபை இடிக்கப்பட்டது. ஆனால் அதேபகுதியில் அம்மாவின் அரசு இன்னொரு இடத்தை எங்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தது. கிறிஸ்தவர் களாகிய நாங்கள் அதிமுகவையும் அம்மா அவர்களையும் துதிக்கிறோம். அவர்களை ஆண்டவர் மேலும் உற்சாகப்படுத்துவார். எங்களுக்கு பெரிய நன்றியை செய்த முதல்வர் துணை முதல்வருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் முழு ஆதரவு அளிப்போம். இவ்வாறு கூறினார்.
திமுக ஆட்சியில் கடந்த மூன்று முறை மாநில சிறுபான்மை ஆணையத் தலைவராக இருந்தவரும், இந்திய சுவிசேஷ திருச்சபைகளில் முக்கிய பேராயராக இருந்து வருபவர்தான் எஸ்ரா சற்குணம். அவரின் கீழ் இந்தியா முழுவதும் 8436 திருச்சபைகளும், தமிழ்நாட்டில் 720 திருச்சபைகளும், ஐந்து பேராயர்களும், 540 ஆயர்களும், தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விசுவாசிகளும் கொண்ட பேராயமாக ECI திருச்சபை இயங்கி வருகிறது. இந்நிலையில் அதன் தலைவர் எஸ்றா சற்குணம் திமுகவுக்கு ஆதரவாக பேசியும் செயல்பட்டும் வருகிறார். அவர் அடிக்கடி அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்து சர்ச்சைகளில் சிக்குபவராகவும் இருந்து வருகிறார் எஸ்ராசற்குணம்.
ஆனால் தற்போது இவரின் கட்டுப்பாட்டிலிருந்த பேராயத்திற்கு நிரந்தர நிர்வாக பேராயர் பொறுப்பை அவரது மகள் டாக்டர் கதிரொளி மாணிக்கம் அவர்கள் ஏற்றுள்ளார். பேராயத்தின் முழு கட்டுப்பாடும் கதிரொளி மாணிக்கத்திடம் உள்ளது. இந்நிலையில் அவரது மகள் கதிரொளி மாணிக்கம் அதிமுக அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக கிறிஸ்தவ சிறுபான்மையின மக்களுக்கு உறுதுணையாக இருந்து வருவதை பாராட்டி வருகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு ஆதரவு த, முன்வந்துள்ளார். அதனடிப்படையில் டாக்டர் கதிரொளி மாணிக்கம் அவர்கள் தலைமையில் ஐந்து பேராயர்கள் 50 ஆயர்கள் இன்று தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்ரா சற்குணம் தொடர்ந்து திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் அவரது மகள் அதிமுகவுக்கும், முதல்வர், துணை முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்திருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.