The current regime is in an unconscious state - Stalin

தற்போது நடைபெறும் ஆட்சி எதைப்பற்றியும் கவலைப்படாமல் திக்கற்ற வக்கற்ற நிலையில் உள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்கட்சிகளை விமர்சிக்கவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

பள்ளி பேருந்துகள் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக பயன்படுத்துவதாக புகார் வருகிறது. பள்ளி மாணவர்களை எம்.ஜி.ஆர். நுற்றாண்டு விழாவுக்கு அழைத்து செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கரூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது 100 நாள் வேலை திட்ட ஊழியர்களை, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு அழைத்து செல்வதாக புகார் எழுந்துள்ளது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

டெங்கு பரவ அரசு பணம் வாங்கியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ஆட்சி எதைப்பற்றியும் கவலைப்பாடமல் திக்கற்ற வக்கற்ற நிலையில் உள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.