Asianet News TamilAsianet News Tamil

80 வயது தாயை நடுரோட்டில் பறிதவிக்க விட்ட கொடூர மகன்.. காவல் ஆணையர் அலுவலகத்தில் கதறிய மூதாட்டி.

அவர் இறந்த பின்பு கிடைக்கப்பெற்ற தொகையையும் தனக்கு அளிக்கவில்லை என்றும், மூதாட்டு கண்ணீர் மல்க காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

.

The cruel son who abducted his 80-year-old mother in  the road. Grandma Complaint in cop.
Author
Chennai, First Published Jul 7, 2021, 11:23 AM IST

மூன்று பிள்ளைகள் இருந்தும் 80 வயதான தன்னை உண்ண உணவின்றி தங்கம் இடமின்றி வீட்டை விட்டு வெளியேற்றியதாக 80 வயது மூதாட்டு, சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் கோமளா பாய் இவருக்கு வயது 80 ஆகிறது. இவர் தற்போது பச்சையம்மன் டிரஸ்ட் என்கிற வளசரவாக்கத்தில் செயல்பட்டுவரும் இல்லத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர்.  இந்நிலையில் இவரது கணவர் சேஷாசலம் நேவியில் பணிபுரிந்த பிறகு  எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். பணியில் இருந்த போது உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்த நிலையில் அவரின் பணி தன் மகனுக்கு கிடைத்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன் தன் கணவர் இறந்ததால் அவருடை வேலை தன்மகன் கமலக்கண்ணனுக்கு பணி நிரந்தரம் ஆனது. 

The cruel son who abducted his 80-year-old mother in  the road. Grandma Complaint in cop.

பிள்ளைகள் கேட்கவே, இருந்த சொந்த வீட்டையும் விற்று மூன்று பிள்ளைகளுக்கும் சரிசமமாய் பிரித்து கொடுத்துள்ளார் கோமலாபாய். அதன்பின்பு இவர்  சவுக்கார் பேட்டையில் 15 ஆண்டுகளாக பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக பணி புரிந்து வந்துள்ளார். பின்பு கே ஆர் விஜயா, ஐசரி கணேசன், ராதிகா, உள்ளிட்டோர் வீடுகளுக்கும் சென்று வேலை செய்து வந்து அந்த பணத்தை மகனிடம் கொடுத்ததாக கோமளாபாய் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனது மகன் கமலக்கண்ணன் ஆயிரம் ரூபாய் மாத மாதமாதம் வழங்கி வந்துள்ள நிலையில், தற்போது 3000 ரூபாய் கொடுத்து வருகிறார் எனவும் தெரிவிக்கிறார்.

The cruel son who abducted his 80-year-old mother in  the road. Grandma Complaint in cop.

மேலும் தனது மகனிடம் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டால் பணமில்லை என்று கூறி வருகிறான், எனது கணவர் பெயரில் வரும் பென்சன் பணத்தையும், தன்னிடம் வழங்குவது இல்லை என்றும், அவர் இறந்த பின்பு கிடைக்கப்பெற்ற தொகையையும் தனக்கு அளிக்கவில்லை என்றும், மூதாட்டு கண்ணீர் மல்க காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் மூதாட்டியிடம் தெரிவித்துள்ளனர். 80 வயதுடைய தாயை தனது தெய்வம் போன்று போற்றி பாதுகாக்க வேண்டிய பெற்ற பிள்ளையே அனைத்து பணத்தையும் வாங்கிக்கொண்டு சொந்த வீட்டையும் விற்றுவிட்டு தாயை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ள சம்பவம் அதிரச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios