பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இபிஎஸ்யிடம் விசாரணை நடத்த கோரி மனு.! நீதிமன்றம் கொடுத்த புதிய ட்விஸ்ட்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்ட விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 

The court dismissed the petition seeking an investigation by Edappadi Palaniswami

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், டாக்டர், பேராசிரியை என்று பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதுதொடர்பான வீடியோ கடந்த 2019- ம் ஆண்டு வெளியானது. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்ட போது பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் புகார் அளித்த சகோதர்களின் பெயர்களும் வெளியாகியிருந்தது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகார் அளிக்க தயங்கினர். இந்தநிலையில் பாலச்சந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,

நீண்ட நாட்களாக தூக்கத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலினை எழுப்புங்கள்.! தமிழக சட்ட ஒழுங்கை காட்டுங்கள்- குஷ்பூ

The court dismissed the petition seeking an investigation by Edappadi Palaniswami

எடப்பாடியிடம் விசாரணை

பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டுமெனவும், அரசாணையில் பெயர்களை இடம்பெறச் செய்தது குறித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், அப்போதைய தலைமை செயலாளரிடமும் விசாரணை நடத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி தமிழக முதல்வரின் முகவரி துறையிடம் மனு அளித்ததாக குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் இந்த புகார் மனு மீது எந்த நவடிக்கையும் எடுக்கவில்லையென தெரிவித்துள்ளார். எனவே, சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

The court dismissed the petition seeking an investigation by Edappadi Palaniswami

அபராதத்துடன் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்ட காவல்துறை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும்  சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக  நடவடிக்கை எடுக்கும் படி உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விவரம் தெரிந்து கொள்ளாமல்  இந்த வழக்கை தாக்கல் செய்த பாலச்சந்திரனுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்

நாட்டை குடும்பமாக பார்க்கும் மோடி..! ஏற்றத்தாழ்வுகளை தீவிரப்படுத்திய திராவிட மாடல்- ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios