Asianet News TamilAsianet News Tamil

கொரோனா பரவும் அபாயம்.!தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்.. சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை.!

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட  மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தமிழகத்தில் பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை செய்துள்ளார்.

The coroner wants to roll the dead into the grave !!
Author
Tamil Nadu, First Published Aug 29, 2020, 8:41 AM IST

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட  மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தமிழகத்தில் பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை செய்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்தஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகையில்  நடைபெற்றது. அதில் பங்கேற்ற சுகாதாரத் துறை செயலர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும் போது...

The coroner wants to roll the dead into the grave !!

"மகாராஷ்டிராவில் 14 ஆயிரம், ஆந்திராவில் 10 ஆயிரம், கர்நாடகாவில் 9 ஆயிரம் பேர் என தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பதிவாகி வருகிறது. அண்டை மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதால், இதை ஓர் எச்சரிக்கையான காலமாக கருதி, மக்கள்கவனமாக இருக்க வேண்டும்.தமிழகத்தில் தினமும் 75 ஆயிரம் பரிசோதனைகள் என இதுவரை 45 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் ஜூலை மாதத்தில் இருந்து தினமும் 6 ஆயிரத்துக்கும் குறைவானோர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் 1,300-க்கும் குறைவாக பதிவாகி வருகிறது.

The coroner wants to roll the dead into the grave !!

எப்போதும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மூச்சுத் திணறல் வந்த பிறகு தொற்றாளர்களைக் காப்பாற்றுவது கடினம். எனவே கொரோனா அறிகுறி இருந்தால் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.தற்போது கோவை, கடலூர், சேலம் மாவட்டங்களிலும், சென்னையில் அடையாறு, கோடம்பாக்கம், திருவிக நகர் பகுதிகளிலும் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. விதிகளை மீறும் பொதுமக்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிப்பது, மாநகராட்சி மட்டுமல்லாது போலீஸாரும் அபராதம் விதிப்பது தொடர்பான அவசரச் சட்டம் தயாராகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios