சித்த மருத்துவ கேர் சென்டர்கள்  தமிழகம் முழுவதும் விரைவில் அதிகரிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். வடசென்னை  வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் கோரோன தொற்று ஏற்பட்டு சித்த முறையில் சிகிச்சை பெற்று வந்த 25 நபர்கள் பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பி உள்ளனர். இவர்களை தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரம் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பழங்கள் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

அதன்பின் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் :- மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கொரோனா தோய்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஊரடங்கு காலம் முடிவதற்குள் கொரோனா சென்னையில் முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும். என்றார், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் செயல்பட்டு வரும் சித்தா மருத்துவ மையத்தில் கொரோனா நோய்தொற்று உள்ள 486 பேர் அனுமதிக்கப்பட்டதில் 206 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் இல்லாத சூழலில், எதிர்கட்சிகள் சமூக பரவலாக அறிவிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். சித்த மருத்துவத்தை அலோபதி மருத்துவத்திற்கு இணையாக இன்னும் சில நாட்களில் உயர்ந்த இடத்தை பிடிக்கும்,

விரைவில் சித்த கேர் சென்டர்கள்  தமிழகம் முழுவதும்  அமைக்கப்படும் . சென்னையிலேயே அதிக அளவில் நோய் தொற்று இருந்த தண்டையார்பேட்டை மண்டலம் தற்போது சென்னையின் குறைந்த எண்ணிக்கை கொண்ட மண்டலமாக மாறி இருக்கிறது என்றார். நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் சென்ற விவகாரம் குறித்த செய்தியாளார்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,  ரஜினி காந்த் இ-பாஸ் வாங்கியிருப்பார் என கூறிய அவர், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.