The coordinator of the party which removed 175 people from the AIADMK
முன்னாள் எம்.பி. குமாரசாமி உட்பட டிடிவி ஆதரவாளர்கள் 175 பேரை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியும் உத்தரவிட்டுள்ளனர்.
ஆர்.கே.நகரில் அதிமுகவை வீழ்த்தி தினகரன் அபார வெற்றி பெற்றார். தினகரனின் வெற்றியை அடுத்து அதிமுகவிலிருந்து தினகரன் ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு வருகின்றனர்.
கட்சியின் விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி தினகரனின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டனர். அதையடுத்து நாஞ்சில் சம்பத், புகழேந்தி, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், கலைராஜன் ஆகியோரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் நீக்கினர்.
அவர்களை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். தினகரனின் ஆதரவாளர்கள் மாவட்ட வாரியாக நீக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் எம்.பி. குமாரசாமி உட்பட டிடிவி ஆதரவாளர்கள் 175 பேரை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியும் உத்தரவிட்டுள்ளனர்.
இதில், பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார், மருத்துவ அணி செயலாளர் டாக்டர் இளம்வழுதி எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் பொன்னுதுரை, அழகுமலை, மாவட்ட மகளிர் அணி தலைவி தமிழரசி, சினாத் தேவர், வைகை பாலன், துரைராஜ், மதன்குமார் அழகுராஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
