The coordinator of Chennai Ezhilil Maiyaan said that the academic work has not been affected by the Jatoto Geo struggle and to respect the feelings of the teachers.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் கல்வி பணிகள் பாதிக்கப்படவில்லை எனவும், ஆசிரியர்கல் ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் சென்னை எழிலகத்தில் ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே வழக்கறிஞர் சேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திவரும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
மேலும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் செப். 14 ஆம் தேதி க்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனாலும் நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாயவன், ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் கல்வி பணிகள் பாதிக்கப்படவில்லை எனவும், ஆசிரியர்கல் ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், போராட்டம் கைவிடப்படவில்லை எனவும் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார். கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டார்.
