கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரபல ஒப்பந்தகாரர் எஸ்.பி.கே அண்ட் கோ உரிமையாளர் செய்யாதுரை ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், வேலைவாய்ப்பின்றி,பொருளாதாரத்திலும் முடங்கிக் கிடக்கின்றனர் மக்கள்.  இந்நிலையில்,  தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி அளிக்க முதல்வர் தரப்பிலும், இந்திய அளவில் பிரதமர் தரப்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனையடுத்து டி.வி.எஸ். மோட்டார்ஸ், சக்தி மசாலா உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழக அரசுக்கு நிதி வழங்கி வருகின்றன. இந்நிலையில், ’’தமிழக நெடுஞ்சாலை பணிகளை செய்யும் ஒப்பந்த நிறுவனம் எஸ்.பி.கே அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாத்துறை முதல்வர் நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார். இதுவரை முதல்வர் நிவாரண நிதியாக ரூ.40 கோடி வரை வந்து சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.