The change in power in the state for the next 6 months

தமிழகத்தில் அடுத்த 6 மாதத்திற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பன்னீர்செல்வம் முதல் அமைச்சர் ஆவார் என்று மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு காசிமேடு விசைப்படகு உரிமையாளர்களை அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் இன்று காலை சந்தித்து ஆதரவு கோரினார்.

இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் அடுத்த மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். முதல் அமைச்சராக பன்னீர்செல்வம் பதவியேற்றதும், மீனவர்கள் நித்தம் நித்தம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முழு தீர்வு காணப்படும். தோல்வியைக் கண்டு அஞ்சிய அமைச்சர்கள் தீவிர பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகளும் செயல்படுகின்றனர்." இவ்வாறு தனது தேர்தல் பரப்புரையில் மசூதனன் தெரிவித்துள்ளார்.