Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தை பிரித்து திருச்சியை தலைமையிடமாக அறித்த மத்திய அரசு... மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்..!

வேண்டுகோளை ஏற்று, திருச்சி சர்க்கிள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக இத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

The Central Government which divided Tamil Nadu and made Trichy the headquarters
Author
Tamil Nadu, First Published Aug 27, 2020, 12:55 PM IST

தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்தார். மேலும் மதுரையில் உள்ள சிறப்புகளை பட்டியலிட்டும் தலைநகர கோரிக்கையை முன்வைத்தார். மதுரையைச் சேர்ந்த இன்னொரு அமைச்சர் செல்லூர் ராஜூவும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மதுரையை  தலைநகராக்க விரும்பினார் என்று தெரிவித்தார்.The Central Government which divided Tamil Nadu and made Trichy the headquarters

ஆனால்,  திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சியை தலை நகராக்க மாற்ற வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கனவு என்றும் தலை நகராவதற்குரிய தகுதிகள் திருச்சிக்கே இருப்பதாக கருத்து தெரிவித்தார். திருச்சிதான் தலைநகராக்கப்பட வேண்டும் என்று திமுக முதன்மை செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கே.என். நேரு, ட் திமுக எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் ஆகியோரும் வலியுறுத்தினர். இதன் காரணமாக தமிழகத்தின் இரண்டாம் தலைநகரம் திருச்சியா, மதுரையா என்ற பஞ்சாயத்து சமூக ஊடகங்களிலும் ஒலித்து வருகிறது.The Central Government which divided Tamil Nadu and made Trichy the headquarters

​இது ஒருபுறமிருக்க, நாட்டிலுள்ள பழமையான நினைவு சின்னங்கள் மற்றும் பாரம்பரியம் மற்றும் புராதனச் சின்னங்கள் ஆகியவை இந்திய தொல்லியல் மற்றும் பரப்பாய்வுத் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக நாடு முழுவதும் 29 தொல்லியல் வட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.
அதில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வட்டத்தில் 403 தொல்லியல் சின்னங்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஒரே வட்டத்தினால் நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொல்லியல் சின்னங்களை முழுமையாக ஆய்வு செய்ய முடியாமலும், பாதுகாக்க முடியாத நிலை எழுந்தது. The Central Government which divided Tamil Nadu and made Trichy the headquarters
 
ஆகையால், தமிழகத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக தொல்லியல் வட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் திருச்சியை தலைமையிடமாக கொண்டு புதிதாக தொல்லியல் வட்டத்தை உருவாக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று திருச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய தொல்லியல் வட்டம் உருவாக்கப்படுவதாக மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அத்துடன் இந்தியா முழுவதும் 7 புதிய தொல்லியல் வட்டங்கள் உருவாக்கப்படுவதாகவும் அறிவித்தார்.The Central Government which divided Tamil Nadu and made Trichy the headquarters

இதுகுறித்து சு.திருநாவுக்கரசர், ‘’திருச்சியை மையமாகக் கொண்டு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் தனி வட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எனது வேண்டுகோளை ஏற்று, திருச்சி சர்க்கிள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக இத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் தென் மாவட்டங்களில் உள்ள புராதன கோயில்கள் மற்றும் இத்துறையின் வாயிலாக பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து இடங்களும் பாதுகாக்கப்படவும், புனரமைக்கப்படவும், புதிய ஆய்வுகள் மேற்கொள்ளவும், கூடுதலாக நிதி பெறவும், புதிய பணிகள் தொடங்கவும், விரைந்து நடைபெறவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது’எனத் தெரிவித்துள்ளார். தலைப்பை பார்த்து திடுக்கிட்டவர்களுக்கு இப்போது புரிகிறதா..?

Follow Us:
Download App:
  • android
  • ios