நடுத்தர வகுப்பினருக்கு கடன் மீதான வட்டியை தள்ளுபடி செய்யாதது ஏன்? என காங்கிரஸ் எம்பி. ராகுல்காந்தி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.


கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் தனிநபர் வருமானத்தையும் காற்று போன பலூனாக்கியது. இதனால் கீழ்மட்டம் நடுத்தர வர்க்கத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு மனஅழுத்தத்தால் தற்கொலை வரைக்கும் சென்றிருக்கிறார்கள். இந்த சம்பவம் எல்லாம் அரசிற்கு தெரியும். வங்கி நிறுவனங்கள் இதற்கு மேலும் இஎம்ஐ தளர்வு வேண்டாம் என்று கதறுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் கையில் வருமானம் இன்றி சாப்பாட்டுக்கே வழியில்லாமலும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பளம் பிடிதத்துடன் பணிபுரிகிறார்களே.! அவர்கள் எப்படி இஎம்ஐ கட்ட முடியும். இதையெல்லாம் ஏன் மத்திய மாநில அரசுகள் நினைப்பதில்லை. அரசாங்கம் நடத்த முடியவில்லை என்பதற்காக வருமனாத்திற்காக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. வேலையிழந்த ஊழியர்கள் நிலை என்ன? அரசாங்கம் இதையெல்லாம் கணக்கிட்டதா? மத்திய அரசு கொரோனா காலத்திலும் மக்களை தற்கொலை செய்ய தூண்டுகிறது. மக்களை காக்க தான் அரசாங்கம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அரசாங்கம் வாங்கிய கடனை மக்கள் தான் அடைக்க போகிறார்கள். அப்படிப்பட்ட மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக மத்திய அரசு கூடுதலாக கடன்வாங்கி அவர்கள் துன்பத்தில் பங்கு கொள்ளலாமே.!  மத்திய அரசிற்கு குரல் கொடுத்து வருகிறார்கள்.நடுத்தர மக்கள் ரேசன் கார்டுகளை கொண்டு கூட அவர்கள் வாங்கிய வீட்டுக்கடன் கடன் அட்டை போன்ற வட்டிகளை தாராளமாக குறைக்கலாம். மத்திய அரசுக்கு மனம் இருந்தால் மார்க்கம் உண்டுஎன்கிறார்கள் பொருளாதார ஆய்வாளர்கள்.

கொரோனா கால நிவாரண நடவடிக்கையாக, வங்கி கடன் செலுத்துவது தொடர்பாக இ.எம்.ஐ. செலுத்துவதில் 6 மாதங்களுக்கு மத்திய அரசுக்கு விலக்கு அளித்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி தனது 'டுவிட்டரில் பதிவில்... பெரிய தொழிலதிபர்களுக்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வரிச்சலுகையை மத்திய அரசு அளித்துள்ளது. ஆனால், நடுத்தர வகுப்பினருக்கு கடன் மீதான வட்டியை தள்ளுபடி செய்யாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு வருடகாலத்திற்கு நடுத்தர மக்களுக்கான கடன் சுமையை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற குரல் இந்தியா முழுவதும் ஒலிக்க  தொடங்கியிருக்கிறது.