மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்ததால் மாநில அரசுக்கு நிதிச்சுமை அதிகரித்து விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவரது பட்ஜெட் உரையில், ’’மத்திய அரசின் திட்டங்களில் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்து விட்டது. நிதி ஒதுக்கீட்டை குறைத்ததால் மாநில அரசுக்கு நிதிச்சுமை அதிகரித்து விட்டது. செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையின் கீழ் இதுவரை ரூ.3,074.84 கோடி மதிப்பீட்டில் 1,768 கி.மீ. சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறை மாநிலம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டில் சிவகங்கை கோட்டத்திற்கு விரிவுபடுத்தப்பட்டு 622 கி.மீ. சாலைப் பணிகள் ரூ.715 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். 

வரும் நிதி ஆண்டில் காவல்துறைக்கு மட்டும் ரூ.8084.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டுக்கான பயிர் காப்பீடு திட்டத்தில் புதிதாக பயிர்கள் சேர்க்கப்படும். இடி மின்னல், திடீர் மழை, இயற்கை தீயால் ஏற்படும் பாதிப்புகளுக்கு காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் நிதியாண்டில் சிவகங்கை கோட்டத்திற்கு விரிவுபடுத்தப்பட்டு 622 கி.மீ. சாலைப் பணிகள் ரூ.715 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். 

வரும் நிதியாண்டில், 1,986 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் ரூ.1142 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்காக ரூ.13,605.19 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்’’ என அவர் அறிவித்துள்ளார்.