The case will take place on Sep. 20th
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு மீதான விசாரணை வரும் 20 ஆம் தேதி வர உள்ளதாக தெரிகிறது.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை, வாபஸ் பெறுவதாக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் அளித்தனர்.
இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என சட்டப்பேதவை சபாநாயகர் தனபால், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவளித்து வந்த எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக, இன்று அறிவிக்கப்பட்டது.
சபாநாயகர் தனபாலின் இந்த உத்தரவை எதிர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், சபாநாயகர் தனபாலின் உத்தரவு சட்டவிரோதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே திமுக தொடர்ந்த வழக்கில் இந்த மனுவும் இணைப்பு மனுவாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை, வரும் 20 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
