Asianet News TamilAsianet News Tamil

கேப் விடாமல் மாறி மாறி ரிவிட் அடிக்கும் தினாவும், கலாவும் : செய்வது அறியாமல் திணறி நிற்கும் ஆளும் தரப்பு!

The cab will not alter kalanithimaran dhinakaran cm edppadi
The cab will not alter kalanithimaran, dhinakaran : cm edppadi
Author
First Published Jun 28, 2018, 10:45 AM IST


தினகரன் தரப்புக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் மோதல் இருப்பது ஊரறிந்த செய்தி. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது பழனிசாமி தரப்பினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வெற்றியை தொடர்ந்து தினகரன் லைம் லைட்டிலயே இருந்து வந்தார். இதை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது பழனிசாமி அரசு. தினகரன் தொடர்பான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் ஊடங்களை நசுக்கும் வேலையில் இறங்கியுள்ளது பழனிசாமி அரசு. இதற்கு இரண்டு ஊடங்கள் மட்டும் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

The cab will not alter kalanithimaran, dhinakaran : cm edppadiதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளுக்கு தினகரன் ஆதரவாளர்களை அழைக்க கூடாது. அவரின் செய்தியாளர்கள் சந்திப்பை மீண்டும் மீண்டும் ஒளிபரப்ப கூடாது. இதையும் மீறி உங்கள் தொலைக்காட்சியில் அவர் சம்பந்தமான செய்திகள் அதிகம் வந்தால் அரசு கேபிளில் உங்கள் சேனல் வராது’ என்கிற ரீதியில் அரசு தரப்பில் இருந்து மிரட்டல்கள் வருகிறதாம்.

அதன் பிறகுதான் பெரும்பாலான சேனல்கள் தினகரன் செய்திகளை தவிர்க்க தொடங்கியுள்ளதாம். மேலும் பிரபலமான செய்தி ஊடகம் ஒன்று சமீபத்தில் கொங்கு பகுதியில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. அதில் ஏற்பட்ட தகராறில் அந்த சேனலில் புள்ளிகள் பல இடங்களுக்கு பின்னால் தள்ளப்பட்டது. இதில் இருந்து மீண்டு வரும் சமயத்தில் அரசை எதிர்த்துக்கொள்ள கூடாது எனவும் அந்த சேனலின் தலைமை எண்ணியுள்ளது. எனவே தினகரனை புறக்கணிக்க தொடங்கியுள்ளது! முக்கியமாக விவாத நிகழ்ச்சிகளில் தினகரன் தரப்பு ஆட்களை அழைப்பதே இல்லையாம்.

The cab will not alter kalanithimaran, dhinakaran : cm edppadi

தினகரனின் திருப்பூர் போன்ற சுற்றுப்பயண செய்திகளுக்கு எந்த ஊடகமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லையாம். ஆனால் அரசின் இந்த அடக்குமுறைகளுக்கு இரண்டு தொலைக்காட்சிகள் மட்டும் பயப்படவில்லையாம். சன், ஜெயா டிவி ஆகிய சேனல்களை மட்டும் அரசாங்கத்தால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. சன் டிவியிடமும் அரசு தரப்பிலிருந்து பேசியிருக்கிறார்கள். ‘நீங்க எங்கே வேணும்னாலும் தூக்கிப் போடுங்க. ஜெயலலிதா இருந்தபோது அரசு கேபிளில் சன் நியூஸ் வராமல்தான் இருந்தது. இப்போதான் கொஞ்ச நாளா வருது. திரும்பவும் கட் பண்ணினாலும் பண்ணிக்கோங்க. ஆனால் நியூஸில் காம்ப்ரமைஸ் பண்ண முடியாது...’ என்று சொல்லிவிட்டார்களாம். 

ஜெயா டியும் சன் டிவியும் மட்டும் தினகரன் செய்திகளை மாறி மாறி இடைவிடாமல் ஒளிபரப்பி வருகின்றன. எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிரான செய்திகளையும், மக்களின் பேட்டிகளையும் தொலைக்காட்சிகளில் செய்தியாக்க வேண்டாம் என்றும் தமிழக சேனல்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து மிரட்டல்கள் வருகின்றன. தமிழக அரசை விமர்சனம் செய்து வரும் செய்திகளின் செய்தியாளர்களை பணியில் இருந்து நீக்குகிறார்களாம்!!! இதுபோன்ற அதிகப்படியான நெருக்கடிகளுக்கு பின்னால் ஊடக முதலாளிகள் டென்ஷன் ஆகியுள்ளனர். அவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து கவனிப்போம்.

Follow Us:
Download App:
  • android
  • ios