அதற்குள் சென்ற வேகத்தில் போலீசாருடன் திருமண மண்டபத்திற்கே வந்தார் அந்த பெண். அப்போது மிகுந்த ஆத்திரத்தில் இருந்த மணமகன், ஏன் இப்படி செய்தால் ஏன்ன ஆயிற்று என ஆவேசமாக கேட்டார். எவர் தடுத்தாலும் இந்தப் பெண்ணுக்கு  தாலி கட்டியே தீருவேன் என கூறினார். இருவீட்டாரும் அதையே தெரிவித்தனர்.  ஆனால் அங்கு வந்திருந்த போலீசார் இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தினர்

தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்ட மணப்பெண் போலீஸ் உதவியுடன் காதலனை கரம் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் குஷி நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள், காதலிப்பவர்கள் தங்கள் காதலுக்காக எதையும் கண்மூடித்தனமாக செய்வார்கள் என்பதற்காகத்தான் இப்படி சொல்லப்படுகிறது. இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் நடக்க இருந்த நிலையில் அந்த பெண் மணமகன் தனக்கு தாலி கட்டும் நேரத்தில் அதை உதறிவிட்டு காவல் நிலையத்திற்கு சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள விஷ்ணுபுரா கிராமத்தில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. திருமண நிகழ்ச்சிக்காக ஆண் பெண் என இருவீட்டார் தரப்பிலும் ஏராளமானோர் வருகை தந்திருந்தனர். சிறிது நேரத்தில் தாலி கட்டி முடிந்ததும் அனைவரும் விருந்து சாப்பிட தயாராக இருந்தனர். ஆனால் அதற்குள் மணமகள் செய்த காரியம் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது மணமகன் தாலி கட்டும் நேரத்தில் மணமகளின் கையை தட்டி விட்டு திருமண மேடையில் இருந்து இறங்கி வேகவேகமாக காவல் நிலையத்திற்கு சென்றார். மணமகளின் இந்த செயல் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என அங்கிருந்தவர்கள் திகைத்தனர். 

அதற்குள் சென்ற வேகத்தில் போலீசாருடன் திருமண மண்டபத்திற்கே வந்தார் அந்த பெண். அப்போது மிகுந்த ஆத்திரத்தில் இருந்த மணமகன், ஏன் இப்படி செய்தால் ஏன்ன ஆயிற்று என ஆவேசமாக கேட்டார். எவர் தடுத்தாலும் இந்தப் பெண்ணுக்கு தாலி கட்டியே தீருவேன் என கூறினார். இருவீட்டாரும் அதையே தெரிவித்தனர். ஆனால் அங்கு வந்திருந்த போலீசார் இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தினர். அந்தப் பெண் வேறு ஒரு இளைஞரை காதலிப்பதை எடுத்துக் கூறினர். ஏனவே தீர விசாரித்த பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என கூறினர். இதைக்கேட்டு மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பெண் ஏற்கனவே தான் ஒருவரை காதலிப்பதை தனது பெற்றோரிடம் கூறியிருந்தார். ஆனால் காதலை ஏற்க மறுத்த அவரது பெற்றோர் அந்தப் பெண்ணுக்குத் அவசர அவசரமாக திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது அப்போது வெளிச்சத்திற்கு வந்தது.

நான் எனது பெற்றோர்களிடம் எவ்வளவு சொல்லியும் எனது காதலை பெற்றோர்களின் ஏற்கவில்லை, அதனால் தான் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்றேன் என அந்தப் பெண் கூறினார். இதைக் கேட்டு மணமகன் கதறி அழுதார். இதனை அடுத்து நடக்க இருந்த திருமணம் பாதியில் நின்றது. திருமணத்துக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பின்னர் அந்தப் பெண்ணின் பெற்றோரை சமாதானம் செய்த போலீசார், அந்தப் பெண் காதலிக்கும் இளைஞரையும் வரவழைத்தனர். இரு தரப்பினரையும் வைத்து நீண்ட நேரம் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீண்ட நேர சமாதானத்திற்குப் பின் காதலனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தனர். இதையடுத்து அந்தப் பெண்ணுக்கும் அந்த பெண்ணின் காதலுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சரியான நேரத்தில் காவல் துறையினர் தலையிட்டதால் இரு குடும்பத்திற்கும் இடையே எந்த மோதலும் இல்லாமல் பிரச்சனை தவிர்க்கப்பட்டது. போலீஸ் உதவியுடன் இளம் பெண் காதலனை கரம் பிடித்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.