பாஜகவுக்கு பிடிவாதம் இருக்கும். ஆனால் கொஞ்சம் கூட கருணை இருக்காது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்  தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 4அரை ஆண்டுகளாக மக்கள் நலத்திட்டங்களை செயல்டுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாகவும், அவரை மத்திய அரசு திரும்பபெறக்கோரியும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார். இதோபோல் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாத முதலமைச்சர் நாராயணசாமி இல்லத்தை முற்றுகையிடப்போவதாக பாஜக அறிவித்து இருந்தது. 

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக 144 தடை சட்டம் அமலில் உள்ளதால் ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, தலைமை செயலகம், முதலமைச்சர் இல்லம் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுல்லதாகவும் மேலும் மீறி போராட்டம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. மேலும் போராட்டம் காரணமாக கலவரம் ஏற்படாமல் இருக்க 300க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். இந்நிலையில் ஆளுநர் மாளிகை அருகே போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்தும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் அண்ணா சிலை அருகே துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப்பெறக்கோரி நாராயணசாமி தலைமையில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.

 

துணைநிலை ஆளுநருக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்று கண்டன உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர்.  RSS யை தடை செய்த பட்டேலை கையில் எடுத்துள்ளது பாஜக. அதேபோல் RSS க்கு சிம்ம சொப்பனாக விளங்கியவர் காந்தியடிகள், காந்தியை சுட்டு கொன்ற படுபாவிகள்தான் இப்போது  நாட்டை ஆளுகின்றனர். நாட்டை ஆளுவது RSSதான், பாஜக அல்ல. அந்த சங்கிகளின் ஒருவர் தான் கிரண்பேடி. அவர் அரசியல் வாதி கிடையாது. ஐபிஎஸ் படித்த அதிகாரி. ஆனால் அவர் மக்கள் நல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இதனால் கிரண்பேடி அம்பலபடுத்தவே, நாராயணசாமி போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும். மொத்தத்தில் பிரதமர் மோடியும் ஒரு சங்கி தான். 45 நாட்கள் போராடும் விவசாயிகளை, மோடி சந்தித்து பேச வில்லை. எப்போதும் பாஜகவுக்கு பிடிவாதம் இருக்கும். ஆனால் கருணை இருக்காது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.