The BJP government has put people in crisis in 3 years

பெரும்பான்மை உள்ளது என்பதால் அதிகார தோரணையில் செயல்படும் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய பாரதிய ஜனதா அரசின் நடவடிக்கைகள் அனைத்து தரப்பினரையும் பாதித்து விட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளர்.

இது தொடர்பாக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பிரதமர் மோடி உடனடியாக ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளர்.

பெரும்பான்மை உள்ளது என்பதால் அதிகார தோரணையில் செயல்படும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தனிமனித பாதுகாப்பு குறித்து நீதிமன்றம் அளித்த ஆதார் தீர்ப்பை மத்திய அரசு புறம் தள்ளிவிட்டு சர்வாதிகாரமாக மத்திய அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களை 3 ஆண்டில் பாஜக அரசு நெருக்கடியில் ஆழ்த்தி இருக்கிறது. 

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.யால் நாட்டில் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.